Posts

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

தனிமை எதற்கு? (Loneliness for What?) 🎖

Image
சுற்றியிருப்பவரிடத்து சற்றும் சேராமல் எண்ண ஓட்டத்தில் வேறுபட்டு மனதளவில் விலகி தன்னைத் தானே உருக்கிக்கொண்டு தனிமை பிடியில் வாழும் தன்நிகரில்லா உள்ளங்களுக்கு சமர்ப்பணம். நூற்றில் தொண்ணூறு சதவீதமானோர் தனிமை கசப்பானதென்று அறிந்தும் சுற்றியிருப்பவரின் நல்குதல் இல்லாமையின் விளைவால் தனிமையில் தன்னைத் தானே திணித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அவர்களின் சுற்றியிருப்பவர்களின் கசப்பான நிகழ்வாலும் மனம் ஒன்றா செயலாலும் தனிமையை மனக்குமுறலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தனிமையில் இருக்கும் நபரின் மனநிலை, உலகில் தனக்கென யாருமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணிப்பார்கள். சில விடையங்களை பெற்றோர் உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ள தயக்கமிருக்கும். நண்பர்களிடத்து சேரா மனம் சில துயரம்வரும்போது, சொல்ல வழியில்லாமல் தன்னைத் தானே சிதைத்துக்கொள்ள முற்படும். அவர்களின் மனநிலை, யாரேனும் சிறிய அக்கறை காட்டிலும் அதை பெரும் கடலெனக் கொள்ளும் மனப்பாண்மை பின்பு அவர்களின் அன்பு பாசத்திற்க்கு ஏங்கி நிற்கும்.  அன்பு,பாசம் மற்றும் பகிர்தல் இல்லா மனம், மனித...

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

Image
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது  ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...

பிழைகளை அணுகுதல் (Approaching Mistakes)

Image
குற்றங்காணுதலின் (Finding Mistakes) தொடர்பதிவே இது! பிழைகளை கண்டறிந்தபிறகு அதை திருத்திக்கொள்ள முன்னெடுக்கும் தங்களது செயல் பாராட்டிற்கு உரியது. சரியென தவறென இவ்வுலகில் எந்தக்கோட்பாடுகளும் இல்லை, சூழ்நிலைகளைப்பொறுத்தே அவை அமையும். செய்த செயல் யார்க்கும் தீங்குவிளைவிக்காமல் யாரையும் புண்படுத்தாமல் இருப்பின் செய்த செயல் சரியே. பிழையை அணுகும் முறை: இவைமீறியும் ஏதேனும் பிழை இழைத்திருந்தால், இழைத்த பிழைகளை நினைத்து அங்கேயே நின்றுவிடாமல், அதை சீர்செய்ய முனைவது சிறந்த வழி. தாங்கள் செய்த செயலின் நோக்கம் சரியென இருந்தும், யார்க்கும் தீங்கு விளையாத போதும், செய்த செயல் "குற்றம்" என, அறியாதோர் பழியுரைத்தால் கண்டுகொள்ளாது, சினம்கொள்ளாது கடந்து செல்வது உயர்ந்தோர் பண்பு. தாம் செய்த செயலில் பிறர் குற்றம்கண்டால், சினம்கொள்ளாது அதன் உண்மைத்துவத்தை ஆராய்ந்து தவறை அணுகுவதே முறையாகும். திருக்குறள் ௪௨௩ (423): எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. காரணம் கண்டறிதல்: ஒரு பிழை நிகழ்ந்துவிட்டால், நிகழந்ததை நினைத்து வருத்தம்...

விரும்பியதை எளிதில் பெற (Law of Attraction)

Image
தாங்கள் வேண்டியது, விரும்பியது, ஆவல்கொண்டது, அடையநினைத்தது  தங்கள் வாழ்வில் கிடைத்ததுண்டா? ஆம் எனில், அதைதங்களுக்கு பரிசளிப்பது/பரிசளித்தது ஈர்ப்பு விதியே! ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்பு விதி என்பது தாங்கள் அடைவதற்காக மனதார ஒருநிலைபட்டு, பஞ்சபூதத்திற்கு கட்டளையிட்டு அதன்வழி ஈர்த்தல். தங்களிடம் உள்ள ஒவ்வொன்றும் (மனிதர்கள், பொருட்கள், வாழ்க்கைநிலை) ஈர்ப்புவிதியால் ஈர்க்கப்பட்டவையே. ஈர்ப்பு விதி - மாற்றியமைக்கும்: ஈர்ப்பு விதி என்பது தங்கள் மனம் ஆசைக்கிணங்க இசைந்து அவ்வாசையை நோக்கி மனம், செயல் மற்றும் குணத்தை மாற்றியமைக்கும். தாங்கள் அடைய நினைப்பதை நினைத்து அதன்வழி சிறுக சிறுக தொடர்ந்த்து மாறுவதால் பெரிதாக மாற்றம் அமையாதது போல் தங்களுக்கு தோன்றும், உண்மையில் தாங்கள் அந்த ஆசையை நோக்கி நகர்வது தான் உண்மை.  ஆசையை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது எப்படி? "ஒருவரின் வாழ்வில் ஆசைப்பட்டது அனைத்தும் ஈர்த்துவிட்டார்களா?" என்பது கேள்வி, ஆனால் கிடைத்த ஒவ்வொன்றும் ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டவையே. ஒருவரின் ஆசை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது அவரவரின்...

உணர்தலே வாழ்க்கை (Feel the Life)🎖

Image
                உங்கள் வாழ்க்கையில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைவு கூறுங்கள். நீங்கள் நினைவு கூறிய அனைத்தும் உங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகிய தருணங்களையே நிலை நிறுத்தும். அந்த உணர்ப்பூர்வ நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் நிகழச்செய்கையில் , வாழ்க்கை வசப்படும். வசந்த வாழ்க்கை:                 இறைவன் அளித்த பரிசுகளில் ஒன்று காலைப் பொழுது , நமது நாள் எவ்வாறு அமையவேண்டும் என்பதை காலைப் பொழுதில் திட்டமிடல் ஆகச்சிறந்த ஒன்றாகும். திட்டமிடல் என்பது பிறர்க்கு உதவிகரமாக, உற்சாகமாக, மகிழ்ச்சியாக, மனதிடத்துடன்  இருக்க என்ன செய்யவேண்டும் என்ற உணர்வு. காலைப்பொழுது மிகவும் உன்னதமானது அதை நாம் பரபரப்பில் ஈட்டு உணர்தலை இழக்கிறோம். நீங்கள் குளிக்கையில் நீரின் இசையை உணர்ந்ததுண்டா ? பாதையில் நடக்கையில் மரங்கள் அசைந்து வரவேற்ப்பதை உணர்ந்ததுண்டா ? புள்ளினங்கள் பறக்கையில் வணக்கம் மருவுவதை உணர்ந்ததுண்டா ?               ...

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

Image
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும்.  அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க.   அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்வ...

நீங்கள் யார்? (Who you are?)

Image
"யார் நீ?" என்று பிறர் உங்களை கேட்காமல் இருக்க "நீ யார்?" என்று உங்களிடம் நீங்கள் கேட்கத் துவங்குங்கள். "நான் யார்" என்ற உண்மையை உணரத்துவங்குங்கள். சரியோ தவறோ நல்லவரோ தீயவரோ ஏற்றுக்கொள்ளுங்கள். உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுதாலே மாறுதலின் முதற்படி. பலர் தாங்கள் யார் என உணராமல் பிறர் செய்த செயலின்பால் ஈர்த்து அவரை போலவே தன்னை பாவித்து பிறரின் வாழ்வை வாழத் துவங்குவார்கள். அந்த வாழ்வில், தன் வாழ்கையும் வாழ முடியாமல், தான் நினைத்தது போலவும் வாழ முடியாமல்  ஏங்குவார். உங்களுக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம் வழிகாட்டலாம் ஆனால் அதன் வழிநிற்க நாம் தான் முயற்சி செய்தல் வேண்டும். "திசைகாட்டி திசை/வழி மட்டுமே காட்டி நிற்கும், அந்த இடத்திற்கு ஒரு போலும் ஈட்டுச்செல்லது" "புகழுக்கு மயங்கதோர் யாரும் இல்லை! உங்களை பலரும் பலவாறு புகழ்வார்கள். அங்ஙனம் புகழப்படும்போது அதன் உன்மைத்துவத்தை ஆராய்ந்து அதை ஏறுக்கொள்க. அங்ஙனம் ஆராயாமல் தலைக்கு ஏற்றினால் படும் சிரமம் நமக்கே. இருள் நீக்கி  இன்பம் பயக்கும் மருள்நீக்கி மாசறு காட்சி யவர்க்கு   ...

புது வருடத் தீர்மானம் - New Year 🎖

Image
"அடுத்தவரின் இலை பார்த்து பசி ஆருதல் சிரமம். " அண்மையில் இருப்பவர்கள் புத்தாண்டிர்க்கு தீர்மானம் (Resolution) எடுப்பதை கேட்டிருப்பீர்கள். நாமும் எடுப்போம் என எடுக்காமல், நாம் எடுக்கும் தீர்மானத்தின் விளைவு நம் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டுவர உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள். சென்ற ஆண்டு நாம் தீர்மானம் எடுத்திருப்போம் அதை முடித்திருந்தால் சிறப்பு, முடிக்க முடியாமல் விடப்படிருந்தால் அதன் காரணம் நோக்குங்கள். மறுபடியும் நேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பதே பிழைகளும் திருதிக்கொள்ளுதலும் தானே! எடுக்கும் தீர்மானம் வெற்றிகரமாக முடிய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொள்க. எதற்க்கு முக்கியத்துவம் அதிகம் என்று ஆய்க, பின்பு முன்னுரிமை கொடுத்து சிறப்பான திட்டதோடு செயல்படுத்ததுவங்குங்கள்.  ஒரு சின்ன நல்ல முடிவு நம் வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு வழி வகுக்கும். (விளக்கம்:  பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலைக்கு காரணம் காண்க! ) எடுக்கும் தீர்மானத்தை இன்றிலிருந்து செய்ய துவங்க ஆரம்பியுங்கள். இன்றை விட சிறந்த நாள் என்றும் இல்லை என்ற எண்ண...

குழப்பம் (அ) என்னமோ மாதிரி இருக்கு

நாம் அன்றாட வாழ்வில் இந்த வார்த்தையை கேளாமல் இருந்திருக்க மாட்டோம். சில சமயங்களில் நமக்கு நாமே சொல்லியிருப்போம். “என்னமோ மாதிரி இருக்கு!” அந்த என்னமோ மாதிரி இருக்கு என்பதின் நிலைக்கு எவராலும் சரிசெய்து தரமுடியாயது. அது வேறொன்றும் இல்லை மனக்குழப்பம் தான். இந்த நிலையில் மனதால் திரிந்து விலகியது போல் உணர்வோம். விளக்கம்: அன்றாட வாழ்வில் தேக்கிவைக்கும் மன உளைச்சல் சிறுகசேர்ந்து மனம் அமைதிபடும் தருவாயில் ஒரு அசோவ்கரீகத்தை வெளிபடுத்தும். இது நேரக்காரணம் பலநேரங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிபோடுவதின் விளைவே. சில பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காணுதல் காட்டிலும் , அதை ஆறப்போட்டு சரிசெய்தல் சிறப்பான முடிவாக இருக்கும். அவ்வாறு அது பிறகு களையப்படாமல் விடும் தருவாயில் மனதின் அழுத்தமாய் வெளிப்படுகையில் அந்தக் குழப்பம் ஏற்படுகிறது. பலக்குழப்பங்கள் ஒன்றுசேரவே “என்னமோ மாதிரி இருக்கு” என்ற நிலை மனதிர்க்கு உதிர்க்கிறது மனச்சோர்வு உண்டாகிறது. வெளிஉலகத்திற்க்கு புரியாது: இந்த நிலையில் தங்களையே வேறுஒருவர் போல உணர்வீர்கள். ஒரு மந்த நிலை ஏற்படும்....

மகிழ்ச்சி எங்கே? (Where the happiness is?)🎖

பலரின் கேள்வி இது தான், மகிழ்ச்சி எங்கே உள்ளது என்று. உண்மையில் சொல்லப்போனால் மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. நீங்கள் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. மகிழ்ச்சி மனதின் ஒரு நிலை. தனக்கு உகந்த, பிடித்த நிகழ்வுகள் நடக்கும் தருவாயில் வெளிப்படும் உணர்வே மகிழ்ச்சி. மகிழ்ச்சி வரையறையற்றது, எல்லைகளில்லாதது. நான் ஏன் மகிழ்ச்சியை இழக்கிறேன்? நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை அடுத்தவிரடம் தேடும் தருவாயில் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் நம் நண்பர்களுடன் இணைவதே மகிழ்ச்சியேனில் அவர்கள் இல்லாத தருணம் மகிழ்ச்சியிழந்து துன்பத்தில் தவழ்கிறோம். உங்களின் மகிழ்ச்சியை உங்களிடமே தேடுங்கள் அதை உங்களிடமே உணரத்துவங்குங்கள். துன்பம் தளுவும் தருவாயில் நான் என்ன செய்ய வேண்டும்? ஒருவர்க்கு இன்பம் மட்டுமே வாழ்க்கையேனில் வாழ்க்கை வெறுத்துவிடும். அதன் உன்னததுவம் அறியை இலயாது. அதை சீர்செய்ய துன்பமும் அவசியம் என்பதை உணருங்கள். "சீனி தின்னுடு காபி குடிச்சா இனிப்பெங்க இருக்கும்?" என்று வட்டார வழக்கில் கேள்விபட்டிருபோம். காரமும் இனிப்பும் கலந்து உண்கையில் இரண்டின் சுவையும் நன்கு ...
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.