[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

பிழைகளை அணுகுதல் (Approaching Mistakes)

குற்றங்காணுதலின் (Finding Mistakes) தொடர்பதிவே இது!
பிழைகளை கண்டறிந்தபிறகு அதை திருத்திக்கொள்ள முன்னெடுக்கும் தங்களது செயல் பாராட்டிற்கு உரியது.

சரியென தவறென இவ்வுலகில் எந்தக்கோட்பாடுகளும் இல்லை, சூழ்நிலைகளைப்பொறுத்தே அவை அமையும். செய்த செயல் யார்க்கும் தீங்குவிளைவிக்காமல் யாரையும் புண்படுத்தாமல் இருப்பின் செய்த செயல் சரியே.

பிழையை அணுகும் முறை:
இவைமீறியும் ஏதேனும் பிழை இழைத்திருந்தால், இழைத்த பிழைகளை நினைத்து அங்கேயே நின்றுவிடாமல், அதை சீர்செய்ய முனைவது சிறந்த வழி.



தாங்கள் செய்த செயலின் நோக்கம் சரியென இருந்தும், யார்க்கும் தீங்கு விளையாத போதும், செய்த செயல் "குற்றம்" என, அறியாதோர் பழியுரைத்தால் கண்டுகொள்ளாது, சினம்கொள்ளாது கடந்து செல்வது உயர்ந்தோர் பண்பு.
தாம் செய்த செயலில் பிறர் குற்றம்கண்டால், சினம்கொள்ளாது அதன் உண்மைத்துவத்தை ஆராய்ந்து தவறை அணுகுவதே முறையாகும்.

திருக்குறள் ௪௨௩ (423):
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

காரணம் கண்டறிதல்:
ஒரு பிழை நிகழ்ந்துவிட்டால், நிகழந்ததை நினைத்து வருத்தம் மட்டும் கொள்ளாமல் அது நிகழ்ந்த காரணிகளை (Cause Factor) கண்டறிந்து அதை எதிர்காலத்தில் நிகழா வண்ணம் காத்தல் வேண்டும். செய்த பிழையை ஒப்புக்கொள்ள தயங்குபவர்கள் அதை செய்யாது இருப்பது சிறப்பு. செய்த பிழையை தவறென தெரிந்தபிறகு ஒப்புக்கொள்ளுதலே, நல்வழிப்படுதலின் வெளிப்பாடு.



பிழையை, பிழையென தான் கண்டறிந்த பிறகும் அதை சரியென வாதிடுவது நம்மை நாம் சீர்செய்து கொள்ளும் பாதையிலிருந்து விளக்கிக்கொள்வதற்கு ஒப்பானது.

"ஆன்றோர் சான்றோரை உருவாக்கியது பிழைகளே!"

பிழைகள் வளர்ச்சிற்கு:
"பிழைகளை செய்யாதோர் ஏதும் புதிதாக முயற்சி செய்யவில்லை" என்பதே பொருள்.
பிழைகளை செய்து, அதனை திருத்திக்கொண்டே வாழ்வில் வளர்ச்சியடைகின்றோம். பிழைகளை பிழை எனக்கருத்தாமல்  அதிலிருந்து எவ்வாறு கற்று மேம்படுத்திக்கொள்வது என ஆய்க.



நீங்கள் செய்த தவறை மறுமுறை இளைக்கையில், அது தெரியாமல் செய்ததாக ஒப்புக்கொள்ளப்படாது அது நீங்கள் எடுத்த முடிவாகவே இருக்கும். இதிலிருந்து ஒவ்வொரு தவறிலும் கற்றுக்கொள்ளுதலின் அவசியம் அறிகிறோம்.
"களவையும் கற்று மற!"
பிழைகளை செய்ய வழியுறுத்தப்படவில்லை, நிகழ்ந்தால் அதை உங்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள முனையச்செய்கிறேன், இங்கணம் ஆனூர் பிரதீப்.



Share to friends via WhatsApp 


<முந்தைய பதிவு                                                                                                   அடுத்த பதிவு >

பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை