Posts

Showing posts from December, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

வாழ்க்கைத் திருடன் (Get rid of Smartphone Addiction)

Image
வாழ்வில் அனைத்து நேரங்களில் துணையாய் இருக்கும் நண்பனாகவும், இதயம் அருகில் இருக்கும் வாழ்க்கைத் துணையாகவும், தாம் எண்ணியதை முடிக்க வல்ல அடிமையாகவும் இருக்கும் ஸ்மாட்போன் (Smartphone) பற்றிய பதிவே இது. தாம் நினைத்ததை நித்தம் நின்ற இடத்தில் பெற, தொலைவில் உள்ள உறவுகளிடம் காணொளி உரையாட, உண்ணும் உணவை உறைவிடத்தில் பெற ஆவல் கொண்டதை ஆன்லைனில் பெற என பட்டியலில் அடங்கா பல செயல்களை செய்யவல்ல ஸ்மாட்போன், மனிதர்களுக்கு அடிமை என்பதை மறந்து அது மனிதர்களுக்கு எதிராக திரும்பினால்..? வாழ்க்கை திருடன் - ஸ்மார்ட்போன்: ஸ்மார்ட்போன் மனிதர்களுக்கு உதவும் சாதனமாய் அல்லாமல் அடிமையாக்கி அவர்களையே ஆட்கொள்ள துவங்கியுள்ளது. தமக்கு தேவையானவற்றை கொடுத்து, வசிகரிக்க துவங்கிய சாதனம் இப்போது தேவையில்லாதவற்றையும் உட்புகுத்தி தமது நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை, நேரத்தினால் ஆனவை. அவ்வாறு நேரத்தை திருடுவது அவர்களின் வாழ்க்கையை திருடுவதற்கு சமானமாகும்.  ஏன் மீள வேண்டும்?, எவ்வாறு அடிமை பட்டோம்?, அதன் விளைவு என்ன?, அதிலிருந்து மீள்வது எவ்வாறு? என்பதை பற்றிய இப்பதிவில் காண்போம்.
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.