Posts

Showing posts from April, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

கேள்வி இன்பம் (Pleasure in asking Questions) 🎖

Image
தொழில்நுட்ப வளர்ச்சியும் காலகட்டம் மாற்றமும் மனிதனை அறிவுக்கூரின் அடுத்தக்கட்டம் நகர்த்திச்செல்கிறது. இதற்கு காரணம் வற்றா அறிவும், தீரா வித்யாதாகமும் (Knowledge Thirst).  வித்யாதகத்திற்கு மூலக்கூறு அறிவார்ந்த கேள்விகளும், அதை அறிய நினைக்கும் விடாமுயற்சி மனநலமுமே. கற்றறியாததை அறிந்துகொள்ள முயலும் வழியே கேள்வி. கேள்வி என்பதை கேள்வி இன்பம் எனக்கூறுவதன் காரணம், அறிவு. கேள்வியின் விளைவில் அறிவு பிறந்து வாழ்விற்கு இன்பம்பயக்கும் என்பதினால். கேள்வி என்பது அறிவுப்பேழை. எடுக்கும் முயற்சியே திறவுகோல். செல்வமே அறிவு. அன்றாட வாழ்வில் பல கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே வாழ்கிறோம். ஒருவரின் அறிவு வளர்ச்சியானது அவரவர்களின் கேள்விகளை பொருத்தும் அதை அறிய நினைக்கும் விவேகம் பொருத்தும் அமையும். "அறிந்தது கையளவு; அறியாதது உலகளவு" அனைத்தும் அனைவராலும் அறிந்திருத்தல் அரிது. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப தனித்துவ பிரிவில் அறிஞராய் இருக்கக்கூடும். கேள்வி வினவப்படுவதன் மூலம், தமக்கும் ஒன்றும் தெரியாது என்பது அர்த்தமன்று. அறிந்தவரை காட்டிலும் தமக்கு புலப்படாத விடயங்களில், அறியா

குறை கூறாதீர்கள் (Stop Complaining) 🎖

Image
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு குறையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், பலரும் அதை வெளிக்கொணர விரும்புவதில்லை. நம் குறை வெளிய தெரியாவண்ணம் பிறரை, "அவர் சரியில்லை, இவர் சரியில்லை, எவருமே சரியில்லை" எனக்கூறி அந்த பிம்பம் பின் ஒழிகிறோம். "நானெல்லாம் ஒருகாலத்துல,..., நீயும்தான் இருக்கிறியே!" "எங்கையோ போன எருமைமாடு எம்மேல வந்து ஏறுச்சாம்" "இப்படியே பண்ணிட்டு இருந்தா நீ எங்க உருப்பட போற" இவ்வாறு மற்றும் பலவாறு வசப்பாடுதலை கேட்டிருப்போம். சிலர் அன்றாட வாழ்வில் பிறரை குற்றம் சாடியே அவர்களின் வாழ்வையும் பிறரின் முன்னேற்றத்தையும் அழித்துவருகின்றனர். பிறரை குற்றம் சாடுவதில் என்ன தீங்கு என்பதின் விளக்கமே இந்தப்பதிவு. ஒருவர் தான் பிறரைவிட மேலானவர் என்பதை பிறர்க்குவெளிப்படுத்தவும் தன்குறை மறைக்கவும், குற்றம் சாடி, இழிவுபடுத்தி, அவமதித்து, குறை கூறுவது வாடிக்கையாக்கிக்கொள்வர். காலையில் எழுவதில் இருந்து இரவில் துயிலுறாங்க செல்லும் வரை பிறரை பாராட்டுதலைக்காட்டிலும் வசைபாடுவதே அதிகமாக கொள்வர் மனதளவில் குன்றிய சிலர்.  குறைகூறுவதின் மூலம் அன்பு, கருணை, இ
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.