Posts

Showing posts from October, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

பிறரிடம் எதிர்பார்க்கக் கூடாத விடயங்கள்! (Things not to be Expected from others)🎖

Image
நமது ஆசை, எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, விடாமுயற்சி, ஏமாற்றம், துன்பம், வெற்றி, தோல்வி, முன்னேற்றம் என பல காரணக்கூறுகளை கொண்டு வாழ்க்கை இயங்குகிறது. இதில் எதிர்பார்ப்பு என்பது அலாதியானது. பிறரிடம் எதிர்ப்பார்க்கும் பல விடயங்கள் சில சமயங்களில் தம்மை ஏமாற்றுவதுண்டு. அதில் சிலவற்றை இப்பதிவில் தீர்வுகளோடு காணலாம். பிறரிடம் எதிர்பார்த்தல்: "தன்னிடம் ஒன்றும் இல்லை" அதனால் தான் பிறரை எதிர்பார்க்கிறேன் என்பதை விட்டுவிடுங்கள். அன்றாட வாழ்வில் தாம் உலகத்தோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இசைந்து வாழவேண்டும் தான். ஆனால், தமது வாழ்க்கை பிறரது வாழ்க்கையாகிவிடக்கூடாது. கீழ்காணும் சிலவற்றை பிறரிடம் இருந்து எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள்வதே சிறப்பு. 1. மதிப்பு: தம்மை இவர்கள் இவ்வாறு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. மாறாக, நல்மதிப்பை பெரும் வகையில் நடப்பது சிறப்பு. தமது செயல்களில் மதிப்பே தங்களின் மதிப்பு. உலகம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே உலகத்திற்கு மதிப்பு கொடுங்கள். 2. பாராட்டு / வாழ்த்து: தம்மை சுற்றியிருப்பவர்கள் தம்மை எப்போதும் புகழ் பாடவே
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.