Posts

Showing posts from January, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

விரும்பியதை எளிதில் பெற (Law of Attraction)

Image
தாங்கள் வேண்டியது, விரும்பியது, ஆவல்கொண்டது, அடையநினைத்தது  தங்கள் வாழ்வில் கிடைத்ததுண்டா? ஆம் எனில், அதைதங்களுக்கு பரிசளிப்பது/பரிசளித்தது ஈர்ப்பு விதியே! ஈர்ப்பு விதி என்றால் என்ன? ஈர்ப்பு விதி என்பது தாங்கள் அடைவதற்காக மனதார ஒருநிலைபட்டு, பஞ்சபூதத்திற்கு கட்டளையிட்டு அதன்வழி ஈர்த்தல். தங்களிடம் உள்ள ஒவ்வொன்றும் (மனிதர்கள், பொருட்கள், வாழ்க்கைநிலை) ஈர்ப்புவிதியால் ஈர்க்கப்பட்டவையே. ஈர்ப்பு விதி - மாற்றியமைக்கும்: ஈர்ப்பு விதி என்பது தங்கள் மனம் ஆசைக்கிணங்க இசைந்து அவ்வாசையை நோக்கி மனம், செயல் மற்றும் குணத்தை மாற்றியமைக்கும். தாங்கள் அடைய நினைப்பதை நினைத்து அதன்வழி சிறுக சிறுக தொடர்ந்த்து மாறுவதால் பெரிதாக மாற்றம் அமையாதது போல் தங்களுக்கு தோன்றும், உண்மையில் தாங்கள் அந்த ஆசையை நோக்கி நகர்வது தான் உண்மை.  ஆசையை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது எப்படி? "ஒருவரின் வாழ்வில் ஆசைப்பட்டது அனைத்தும் ஈர்த்துவிட்டார்களா?" என்பது கேள்வி, ஆனால் கிடைத்த ஒவ்வொன்றும் ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டவையே. ஒருவரின் ஆசை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது அவரவரின் ஆசையின் ஆழத்தை  பொறுத்தே அம

உணர்தலே வாழ்க்கை (Feel the Life)🎖

Image
                உங்கள் வாழ்க்கையில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைவு கூறுங்கள். நீங்கள் நினைவு கூறிய அனைத்தும் உங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகிய தருணங்களையே நிலை நிறுத்தும். அந்த உணர்ப்பூர்வ நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் நிகழச்செய்கையில் , வாழ்க்கை வசப்படும். வசந்த வாழ்க்கை:                 இறைவன் அளித்த பரிசுகளில் ஒன்று காலைப் பொழுது , நமது நாள் எவ்வாறு அமையவேண்டும் என்பதை காலைப் பொழுதில் திட்டமிடல் ஆகச்சிறந்த ஒன்றாகும். திட்டமிடல் என்பது பிறர்க்கு உதவிகரமாக, உற்சாகமாக, மகிழ்ச்சியாக, மனதிடத்துடன்  இருக்க என்ன செய்யவேண்டும் என்ற உணர்வு. காலைப்பொழுது மிகவும் உன்னதமானது அதை நாம் பரபரப்பில் ஈட்டு உணர்தலை இழக்கிறோம். நீங்கள் குளிக்கையில் நீரின் இசையை உணர்ந்ததுண்டா ? பாதையில் நடக்கையில் மரங்கள் அசைந்து வரவேற்ப்பதை உணர்ந்ததுண்டா ? புள்ளினங்கள் பறக்கையில் வணக்கம் மருவுவதை உணர்ந்ததுண்டா ?                  இவை உணர்கையில் ரசிக்கையில் அந்த சில நாழிகை நீண்டது போல உணர்வீர்கள். கடிகாரத்தை நிமிடத்திற்க்கு நிமிடம் கவனிக்கையில் நேரம் நகராதது போல் தோன்றும். அதே போல் ந

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

Image
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும்.  அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க.   அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்விலே சரி த

நீங்கள் யார்? (Who you are?)

Image
"யார் நீ?" என்று பிறர் உங்களை கேட்காமல் இருக்க "நீ யார்?" என்று உங்களிடம் நீங்கள் கேட்கத் துவங்குங்கள். "நான் யார்" என்ற உண்மையை உணரத்துவங்குங்கள். சரியோ தவறோ நல்லவரோ தீயவரோ ஏற்றுக்கொள்ளுங்கள். உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுதாலே மாறுதலின் முதற்படி. பலர் தாங்கள் யார் என உணராமல் பிறர் செய்த செயலின்பால் ஈர்த்து அவரை போலவே தன்னை பாவித்து பிறரின் வாழ்வை வாழத் துவங்குவார்கள். அந்த வாழ்வில், தன் வாழ்கையும் வாழ முடியாமல், தான் நினைத்தது போலவும் வாழ முடியாமல்  ஏங்குவார். உங்களுக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம் வழிகாட்டலாம் ஆனால் அதன் வழிநிற்க நாம் தான் முயற்சி செய்தல் வேண்டும். "திசைகாட்டி திசை/வழி மட்டுமே காட்டி நிற்கும், அந்த இடத்திற்கு ஒரு போலும் ஈட்டுச்செல்லது" "புகழுக்கு மயங்கதோர் யாரும் இல்லை! உங்களை பலரும் பலவாறு புகழ்வார்கள். அங்ஙனம் புகழப்படும்போது அதன் உன்மைத்துவத்தை ஆராய்ந்து அதை ஏறுக்கொள்க. அங்ஙனம் ஆராயாமல் தலைக்கு ஏற்றினால் படும் சிரமம் நமக்கே. இருள் நீக்கி  இன்பம் பயக்கும் மருள்நீக்கி மாசறு காட்சி யவர்க்கு  
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.