[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

உணர்தலே வாழ்க்கை (Feel the Life)🎖


                உங்கள் வாழ்க்கையில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைவு கூறுங்கள். நீங்கள் நினைவு கூறிய அனைத்தும் உங்கள் உணர்வுப்பூர்வமாக அணுகிய தருணங்களையே நிலை நிறுத்தும். அந்த உணர்ப்பூர்வ நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் நிகழச்செய்கையில், வாழ்க்கை வசப்படும்.


வசந்த வாழ்க்கை:
                இறைவன் அளித்த பரிசுகளில் ஒன்று காலைப் பொழுது, நமது நாள் எவ்வாறு அமையவேண்டும் என்பதை காலைப் பொழுதில் திட்டமிடல் ஆகச்சிறந்த ஒன்றாகும். திட்டமிடல் என்பது பிறர்க்கு உதவிகரமாக, உற்சாகமாக, மகிழ்ச்சியாக, மனதிடத்துடன்  இருக்க என்ன செய்யவேண்டும் என்ற உணர்வு. காலைப்பொழுது மிகவும் உன்னதமானது அதை நாம் பரபரப்பில் ஈட்டு உணர்தலை இழக்கிறோம்.



நீங்கள் குளிக்கையில் நீரின் இசையை உணர்ந்ததுண்டா?

பாதையில் நடக்கையில் மரங்கள் அசைந்து வரவேற்ப்பதை உணர்ந்ததுண்டா?

புள்ளினங்கள் பறக்கையில் வணக்கம் மருவுவதை உணர்ந்ததுண்டா?


                இவை உணர்கையில் ரசிக்கையில் அந்த சில நாழிகை நீண்டது போல உணர்வீர்கள். கடிகாரத்தை நிமிடத்திற்க்கு நிமிடம் கவனிக்கையில் நேரம் நகராதது போல் தோன்றும். அதே போல் நீங்கள் உலகத்துடன் உணர்வால் இணைகையில் நேரம் நீளும், வாழ்க்கை வசந்த்தப்படும்.

மனதால் (உணர்வால்) இணைதல்:
  • உயிர்களிடம்:
    • மனிதர்களுடன் நிகழ்வில் இணையப்படும் முன் மூளையை மனதுடன் இணைத்தல் அவசியம். பிறரிடத்து உரையாடலால் இணைவதை விட உணர்வால் இணையுங்கள். பிறரிடம் உரையாடுகையில் மனதார பேசத்தயாராகுங்கள்.
    • மனதார ஒருவரை உணரத்துவாங்கினால் அவர் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும், உறவுகள் பலப்படும். பொய், கயமை என்பது இருவரிடத்து கரைந்துவிடும்பிறரின் உணர்வுகளை உணர்கையில் அவரை மதிப்பதோடு அவரின் நன்மதிப்பை பெறுகிறோம்.
                                      
    • விலங்கை கையாளுதல் ஒரு கலை. பல திரைப்படங்களில் பார்த்திருப்போம், உயிருக்கு ஆபத்தான விலங்குகள் கூட மனிதர்களிடத்து உறவுபாராட்டுவதை. அவைகளை அவர்கள் உணர்வால் இணையப்பட்டு இயக்குவார்கள்.

  • பொருட்களிடம்:
    • பொருட்களை சேமிப்பதைக் காட்டிலும் அதை காத்தல் மிகக்கடினம். குழந்தை, வாங்கிய பொருளின் மீதுள்ள மோகம் ஓரிரு வாரத்தில் குறையும். இதன் காரணம், உணர்வால் பொருளை அடையாமல் பகட்டின் பொருட்டு பெறுதலின் விளைவே! பொருள் தேவையால் அணுகப்பட்டு உணர்வால் இணைகையில் இறுதிவரை நித்தம் நிலைக்கும்.
    • நீங்கள் பருகும் தேநீர் (Tea), குளம்பி (Coffee), முளரிப்பால் (Rosemilk), உணவு அனைத்தையும் வயிரை நிரப்பும் பண்டம் நேரத்திற்கு எடுக்கும் பண்டம் எனக்கருதாமல் அதன் நிறம், சுவை அறிந்து பருகையில் உட்கொள்கையில் அதன் உண்மை ருசியை உணர்வீர்கள்.


நன்றியுணர்வு:

  • நம் வாழ்வில் எவ்வித துணையில்லாமல் வாழ்தல் சிரமம். பெற்றோர், நம்மை வளர்த்தோர் மீது நன்றி உணர்வு கொள்தல் அவசியம். நினைப்பதை செய்ய உடல் துணை நிற்கும், மனதை தூய்மை செய்ய ஆழ்நிலை துணைநிற்கும், பிறர்க்கு உதவுகையில் மனம் துணைநிற்கும். தோல்வியால் தேய்கையில் விடாமுயற்சி துணைநிற்கும்,தனிமையை தழுவையில் உறவுகள் துணைநிற்கும். இவ்வாறு நம்மை தாங்கிய இத்துணை துணைகளுக்கு நாம், “நன்றியுடன் உள்ளோமா?” என்பது என் கேள்வி.





நாமும் நன்றியும்:
  • நமக்கு நாம் நன்றி சொல்ல, நம்மிடத்து நாம் வைக்கும் மதிப்பு உயரும். உங்களை நீங்கள் மதிப்புமிக்கவராய் உலகில் நிலைநிறுத்த உலகம் உங்களை மதிக்கும்.
  • பிறர் செய்த சிறிய உதவியாயினும் அவர்க்கு நன்றி சொல்லுதலின் சிறப்பு உங்களை உங்களுக்கு பிடித்தமானவராய் காட்டும்.

திருக்குறள் ௧௦௪ (104):
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

பிறர் செய்த நன்மைக்கு திரும்ப செலுத்தும் நன்றியானது உணர்வுப்பூர்வமாக இருத்தல் அவசியம். அவர் செய்த நன்றிக்கு நன்றி என்னும் வாய் வார்தையில் கூறாமல், மனதார கூறுகையில் மலர்மாலை அணிவிப்பது போல உதவி செய்தோரிடத்து தோன்றும்.
  


“தீயது தன்னுடன் தங்கட்டும் , நல்லனவை நாற்புறம் சென்று திரும்பட்டும்”


திருக்குறள் ௭௦௨ (702):
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

பயமில்லா உள்ள(உள்ளம்) உணர்வு தெய்வத்தோடு ஒப்பாகும் என்பது வள்ளுவர் வாக்கு. உணர்தலும் உண்மையும் ஒன்று, உண்மை என்றும் யார்க்கும் அடிபணியாது.

நம் வாழ்வை உணர்வுப்பூர்வமாக வாழத்துவங்குங்கள். நம் வாழ்கையில் உடல்தளர்ந்து முதுமையை எட்டியபிறகு நிலைத்திருப்பது உணர்வால் மலர்ந்த நினைவுகள் மட்டுமே. வாழ்க்கை முழுவதும் உணர்வுப்பூர்வமாக வாழ்ந்திருப்பின் கடை(Last) வாழ்க்கை இனிதே அமையும்.

உங்கள் வாழ்க்கை உணர்தலின் பங்களிப்பை எனக்கு அருளிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிஉணர்வுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.


பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. உனது உணரச் செய்யும் வரிகள் யாவும் அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. மேலான கருத்துக்கு நன்றி நண்பா. ஊக்குவித்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.

      Delete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை