[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

விரும்பியதை எளிதில் பெற (Law of Attraction)

தாங்கள் வேண்டியது, விரும்பியது, ஆவல்கொண்டது, அடையநினைத்தது  தங்கள் வாழ்வில் கிடைத்ததுண்டா?
ஆம் எனில், அதைதங்களுக்கு பரிசளிப்பது/பரிசளித்தது ஈர்ப்பு விதியே!

ஈர்ப்பு விதி என்றால் என்ன?
ஈர்ப்பு விதி என்பது தாங்கள் அடைவதற்காக மனதார ஒருநிலைபட்டு, பஞ்சபூதத்திற்கு கட்டளையிட்டு அதன்வழி ஈர்த்தல்.
தங்களிடம் உள்ள ஒவ்வொன்றும் (மனிதர்கள், பொருட்கள், வாழ்க்கைநிலை) ஈர்ப்புவிதியால் ஈர்க்கப்பட்டவையே.

ஈர்ப்பு விதி - மாற்றியமைக்கும்:
ஈர்ப்பு விதி என்பது தங்கள் மனம் ஆசைக்கிணங்க இசைந்து அவ்வாசையை நோக்கி மனம், செயல் மற்றும் குணத்தை மாற்றியமைக்கும். தாங்கள் அடைய நினைப்பதை நினைத்து அதன்வழி சிறுக சிறுக தொடர்ந்த்து மாறுவதால் பெரிதாக மாற்றம் அமையாதது போல் தங்களுக்கு தோன்றும், உண்மையில் தாங்கள் அந்த ஆசையை நோக்கி நகர்வது தான் உண்மை. 


ஆசையை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது எப்படி?
"ஒருவரின் வாழ்வில் ஆசைப்பட்டது அனைத்தும் ஈர்த்துவிட்டார்களா?" என்பது கேள்வி, ஆனால் கிடைத்த ஒவ்வொன்றும் ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டவையே.
ஒருவரின் ஆசை ஈர்ப்பாற்றலாய் மாற்றுவது அவரவரின் ஆசையின் ஆழத்தை பொறுத்தே அமையும். ஆசையின் ஆழம் மனதில் சுவடுபடுமாயின் (Impression) அவ்வாசை ஈர்ப்பாற்றலாய் மாறவல்லவை. காலகட்டத்திற்க்கு ஏற்றார் போல் கல்வி, வேலை, மனம்சேர்ந்த துணை, வாழ்க்கை என அனைத்தும் ஈர்ப்பாற்றலுக்குள் அடங்கும். 

ஈர்ப்பு விதியும் வாழ்க்கையும்:
ஒவ்வொருவரின் உள்ளுணர்விலும் ஈர்ப்புவிசை இருக்கும். "என்னுள் உள்ள ஈர்ப்புவிசை வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை கொண்டுவரப் போகிறது?" என்ற கேள்வி இருந்தால், தங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவல்லது என்பதே பதில். 
தாங்கள் இருக்கும் தற்போதைய நிலை தாங்கள் ஈர்ப்பாற்றலால் ஈர்த்தவையே! எண்ணம்போல் ஈர்ப்பாற்றல் அமையும், தங்களின் எண்ணத்தின் வழி ஈர்ப்பாற்றல் செயல்படும். தங்களின் எண்ணத்தில் தங்கள் வாழ்க்கை இவ்வாறு அமைதல் வேண்டும் என எண்ணியிருப்பின், அதன் வழி ஈர்ப்புவிதி செயல்பட்டு வாழ்க்கை அமையும். தாங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டதை, தங்களின் எந்த கடின உடலுழைப்பும் இல்லாமல் எளிமையாக அடைய ஈர்ப்பு விதி வழிவகுக்கும்.



நாம் நகர்வதோடு நம்மை நோக்கியும் நகர்த்தும்:
ஈர்ப்பு விதி நம்மில் மட்டும் அடங்காது. இயற்கை துகளாய் இருக்கும் நமக்கு, நமது ஆசையை அடைய பால்வெளி அண்டமும் துணை நிற்கும். அறிவியலின் கூற்றுபடி, அனைத்தும் அணு ஆற்றலால் (Atomic  Energy) அமைந்தது. ஒவ்வொரு செயலும் ஆற்றலால்(Energy) அமையும். நமது விருப்பம் ஈர்ப்பு ஆற்றலாய் மாறி இந்த பால்வெளி மண்டலத்தில் தேடலாய் பயணப்படும், கண்டறிந்து தங்களின் கரங்களில் சேர்க்கும். விண்கலத்திற்கு உந்து எரிபொருள் எவ்வளவு அவசியமோ அதேபோல் ஆசைக்கு உங்களின் ஈர்ப்பாற்றல் அவசியம்.


எண்ணத்தின் எச்சமே ஆசை

நல்ல சேவகன்(Server):
நான் ஆசைப்பட்டதை சில விடையங்களை(விஷயங்களை) அடையவில்லையே, ஈர்பாற்றல் போலியா என்ற கேள்வி எழலாம். ஈர்ப்புவிதிக்கு தாங்கள் போதைய சக்தி அளிக்கவில்லை என்பதே பொருள். முதலாளியின் கட்டளையே சேவகர்களின் செயல்பாடு. சேவகனாகிய ஈர்ப்புவிதிக்கு தாங்கள் முறையே கட்டளையிடப்படவில்லை என்பதே நிதர்சனம். ஈர்ப்புவிதி சரியே வேலைசெய்ய தங்கள் ஆசையின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்தல் அவசியம்.

அழிக்கும் ஆயுதம்:
ஈர்ப்புவிதி ஒரு நன்கு கூர் தீட்டப்பட்ட வாள். கையாளும் விதம் சரியாக இருத்தல் அவசியம் இல்லையேல், வாழ்விற்கு ஆபத்தாய் முடியும்.  சரியானவற்றை ஈர்ப்புவிதியை கொண்டு ஈர்த்து பயனடையவும். தாங்கள் ஈர்க்கப்படுவது வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது அது சரியென ஈர்ப்பது தங்களின் மனதில்.





ஈர்ப்புவிதி அடைய வழி:
1. ஆசைப்படுத்தல்:
     விரும்பியதை அடைய ஆசைப்படுத்தல் வேண்டும். அதை ஆழமாய் மனதில் நிலைக்க வைத்தல் அவசியம். 
2. தேவை உணர்தல்:
     விரும்பியதின் தேவையை அறிதல் அவசியம். வெறும் ஆசை நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தி ஈர்ப்புவிதியை செயலற்று ஆக்கிவிடும். 
3. காதல்:
     விரும்பியதை உள்ளளவில் காதல் கொண்டு அதையடைய எந்நேரமும் நினைத்திருந்தல் அவசியம்.
4. எதிர்மறை எண்ணங்களில் விலகி இருப்பது:
     எதிர்மறை எண்ணங்கள் ஈர்ப்புவிதியை செயலற்றாக்க வல்லவை. நேர்மறை எண்ணங்களை நித்தம் நினைத்தல் அவசியம். தங்களை தாங்கள் விரும்பியதை அடைவதற்கு தகுதியுடையவர்கள் என்று நம்புதல் அவசியம்.
5. நினைத்தல்:
     தாங்கள் விரும்பி ஈர்க்கநினைப்பதை ஒருமனதாகவும் தெளிவாகவும்,  குழப்பம், தடுமாற்றம், சந்தேகம் இல்லாமலும் ஈர்த்தல்வேண்டும்.


ஈர்ப்பாற்றல் அளவை அதிகரிக்க:
தாங்கள் ஆசைப்பட்ட ஈர்க்கநினைப்பது மனதார ஈரத்தால் வேண்டும்.ஆசைப்பட்டதை கிட்டியதுபோல் உணரத்துவங்குதல் வேண்டும். உணர்வின் மிருட்சியால் தங்களுக்கு அதை அடைவதற்கு உத்வேகத்தை தரும்.

மேல்கூறியவற்றை அறிந்து ஈர்ப்புவிதியை சரியே பயன்படுத்தி வாழ்க்கையை வண்ணமயமாக்கும் வண்ணம் ஈர்த்து சீர்செழிப்புடன் வாழவிரும்பும் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.


<முந்தைய பதிவு                                                                                                    அடுத்த பதிவு >


பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை