Posts

Showing posts from December, 2018

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

புது வருடத் தீர்மானம் - New Year 🎖

Image
"அடுத்தவரின் இலை பார்த்து பசி ஆருதல் சிரமம். " அண்மையில் இருப்பவர்கள் புத்தாண்டிர்க்கு தீர்மானம் (Resolution) எடுப்பதை கேட்டிருப்பீர்கள். நாமும் எடுப்போம் என எடுக்காமல், நாம் எடுக்கும் தீர்மானத்தின் விளைவு நம் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டுவர உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள். சென்ற ஆண்டு நாம் தீர்மானம் எடுத்திருப்போம் அதை முடித்திருந்தால் சிறப்பு, முடிக்க முடியாமல் விடப்படிருந்தால் அதன் காரணம் நோக்குங்கள். மறுபடியும் நேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பதே பிழைகளும் திருதிக்கொள்ளுதலும் தானே! எடுக்கும் தீர்மானம் வெற்றிகரமாக முடிய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொள்க. எதற்க்கு முக்கியத்துவம் அதிகம் என்று ஆய்க, பின்பு முன்னுரிமை கொடுத்து சிறப்பான திட்டதோடு செயல்படுத்ததுவங்குங்கள்.  ஒரு சின்ன நல்ல முடிவு நம் வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு வழி வகுக்கும். (விளக்கம்:  பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலைக்கு காரணம் காண்க! ) எடுக்கும் தீர்மானத்தை இன்றிலிருந்து செய்ய துவங்க ஆரம்பியுங்கள். இன்றை விட சிறந்த நாள் என்றும் இல்லை என்ற எண்ண

குழப்பம் (அ) என்னமோ மாதிரி இருக்கு

நாம் அன்றாட வாழ்வில் இந்த வார்த்தையை கேளாமல் இருந்திருக்க மாட்டோம். சில சமயங்களில் நமக்கு நாமே சொல்லியிருப்போம். “என்னமோ மாதிரி இருக்கு!” அந்த என்னமோ மாதிரி இருக்கு என்பதின் நிலைக்கு எவராலும் சரிசெய்து தரமுடியாயது. அது வேறொன்றும் இல்லை மனக்குழப்பம் தான். இந்த நிலையில் மனதால் திரிந்து விலகியது போல் உணர்வோம். விளக்கம்: அன்றாட வாழ்வில் தேக்கிவைக்கும் மன உளைச்சல் சிறுகசேர்ந்து மனம் அமைதிபடும் தருவாயில் ஒரு அசோவ்கரீகத்தை வெளிபடுத்தும். இது நேரக்காரணம் பலநேரங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிபோடுவதின் விளைவே. சில பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காணுதல் காட்டிலும் , அதை ஆறப்போட்டு சரிசெய்தல் சிறப்பான முடிவாக இருக்கும். அவ்வாறு அது பிறகு களையப்படாமல் விடும் தருவாயில் மனதின் அழுத்தமாய் வெளிப்படுகையில் அந்தக் குழப்பம் ஏற்படுகிறது. பலக்குழப்பங்கள் ஒன்றுசேரவே “என்னமோ மாதிரி இருக்கு” என்ற நிலை மனதிர்க்கு உதிர்க்கிறது மனச்சோர்வு உண்டாகிறது. வெளிஉலகத்திற்க்கு புரியாது: இந்த நிலையில் தங்களையே வேறுஒருவர் போல உணர்வீர்கள். ஒரு மந்த நிலை ஏற்படும்.

மகிழ்ச்சி எங்கே? (Where the happiness is?)🎖

பலரின் கேள்வி இது தான், மகிழ்ச்சி எங்கே உள்ளது என்று. உண்மையில் சொல்லப்போனால் மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. நீங்கள் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையில்தான் உள்ளது. மகிழ்ச்சி மனதின் ஒரு நிலை. தனக்கு உகந்த, பிடித்த நிகழ்வுகள் நடக்கும் தருவாயில் வெளிப்படும் உணர்வே மகிழ்ச்சி. மகிழ்ச்சி வரையறையற்றது, எல்லைகளில்லாதது. நான் ஏன் மகிழ்ச்சியை இழக்கிறேன்? நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை அடுத்தவிரடம் தேடும் தருவாயில் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் நம் நண்பர்களுடன் இணைவதே மகிழ்ச்சியேனில் அவர்கள் இல்லாத தருணம் மகிழ்ச்சியிழந்து துன்பத்தில் தவழ்கிறோம். உங்களின் மகிழ்ச்சியை உங்களிடமே தேடுங்கள் அதை உங்களிடமே உணரத்துவங்குங்கள். துன்பம் தளுவும் தருவாயில் நான் என்ன செய்ய வேண்டும்? ஒருவர்க்கு இன்பம் மட்டுமே வாழ்க்கையேனில் வாழ்க்கை வெறுத்துவிடும். அதன் உன்னததுவம் அறியை இலயாது. அதை சீர்செய்ய துன்பமும் அவசியம் என்பதை உணருங்கள். "சீனி தின்னுடு காபி குடிச்சா இனிப்பெங்க இருக்கும்?" என்று வட்டார வழக்கில் கேள்விபட்டிருபோம். காரமும் இனிப்பும் கலந்து உண்கையில் இரண்டின் சுவையும் நன்கு

காணொளியும் (Video) கரைதலும்

நாம் வாழ்வில் முன்னேற சாதனை படைக்க தொழிலில் முன்னேற்றம் காண மனதைரியம் பெறுக நம்மை நாமே ஊக்குவிக்க பலரின் பேச்சை கேட்கிறோம் காணொளிகள் காண்கிறோம். உண்மையாக உணரவேண்டுவது அவர்களின் பேச்சு அந்த காணொளிகளை நாம் செவிவழி ஏற்றி காற்றில்கரைக்கிறோம் என்பதுதான். காணொளியில் அவர் பேசும் அந்த ரம்மிய குரலும், நல்லஎண்ணத்தின் விளைவும், நாம் கேட்கும் சிறுகாலம் நம்மை அதில் மூழ்கி வெற்றிக்களிப்பில் திளைக்கவைக்கும். நம்மை அவர்களின் சிறந்த பேச்சை ஆட்கொள்ளும் போது காதுகள் கேட்கும் ஆனால் மனமும் அறிவும் செவிமடுக்காது. விளைவு காற்றில் கரைதல். அந்த வேகம் துடிப்பு அனைத்தும் தொடர்ந்துஇருக்க காதுகளில் இருந்து மனதிற்கு எடுத்துச்சென்று அதை நிலை நிறுத்தவேண்டும். அதை செய்ய காணொளி இயற்றுபவரால் முடியாது. உலகை இயக்கும் உங்களால் மட்டுமே முடியும். பலரை பார்க்கிறோம் அறிஞரின் பேச்சை கேட்டு ஒரு செயலை துவங்கி அதை அதற்க்கு மேல் எடுத்துச்செல்ல முடியாமல் என்ன செய்யவேண்டும் என்பதை முழுமையாக சிந்திக்காமல் சொல்வண்ண கிளர்ச்சியில் துவங்கி சிக்கித்தவிக்கும் சின்னங்சிறு சிட்டுக்கள். இதை தவிர்க்க செய்யும் செயலில் தெளிவு பெற்று துவ

[கேள்வி பதில்] how to make my mind always focussed on my goal anna

உங்கள் மனதிடம் அமைதியான இயற்க்கை சூழலில் வினாவுங்கள் என்ன தேவைபடுகிறதுஎன்று. முதலில் தயங்கும், பிறகு அதனை உணரதுவாங்குங்கள். உங்கள் இலக்கிற்கு உங்கள் மனம் செவிமடுக்க வேண்டும். மனமில்லாமல் எங்கு சென்றாலும் .எதை செய்தாலும், அந்த செயல் முழுமை அடையாது. மனம் விலகி நின்றால் அதை உங்கள் லட்சியம் வசப்படுதுங்கள். தற்பொழுது உங்கள் மனமும் உங்கள் இலக்கும் ஒரே நேர்கோட்டில் நிற்கும். நீங்கள் செய்ய ஏதும் எந்த ஒரு செயலும் தற்பொழுது செய்யும் தருவாயில் சிறப்பை அடையும், மனநிம்மதியும் கிட்டும். உங்களுக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்று பிரியுங்கள். தேவையானவற்றை வைத்துக்கொண்டு தேவை இல்லாததை களைந்தெரியுங்கள். தேவையில்லாததை தூக்கியெறிந்ததின் விளைவு மனம் கணம் குறைந்து பறக்க துவங்கும். உங்கள் லட்சியத்தை உங்கள் வாழ்க்கையாக்குங்கள். உங்கள் இலக்கிற்க்கு தேவையானதை மட்டும் உடன்வைதிருங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பாதையில் தான் உள்ளீர்கள் என்பதை உறுதிகொள்வோம். பலநேரங்களில் திசைமாற நேரலாம், அந்த தருவாயில் கடந்துவந்த பாதையும் கடந்து செல்ல இருக்கும் பாதையும் நினைவில் கொள்ள சீராகும். உங்களின் வழி சரிதான

ஜீயோ தரவும் (Jio Data) வாழ்க்கை முன்னேற்றமும்

இது ஜீயோ பற்றிய விளம்பரமல்ல! நாளொன்றிற்கு 1.5ஜிபை, உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அந்த இரவு அனைத்தும் அழிக்கப்பட்டு அடுத்த நாள் 1.5ஜிபை கிடைக்கும் என்பது திண்ணம். இவ்வாறு கால அவகாசம் முடியும்வரை நீடிக்கும். அதுபோன்றே வாழ்கை, உங்களுக்கு ஒவ்வொறு நாளும் 24 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் அனைத்தும் அழிக்கப்பட்டு மறுநாள் தோன்றும். இவ்வாறு கூற்றுவோன் வரும் வரை நீளும். கூற்றுவோன் வரும் நாள் பெட்டகத்தில் ரகசியம் காக்கப்பட்டுள்ளது. ஒருவர் நேரத்தை எவ்வாறு உன்னதமாக உபயோகிக்கிறார் என்பதே அவரின் வாழ்கையில் உயர வழிவகுக்கும். இருக்கும் நேரத்தை சரியாக உபயோகப்படுத்தி வாழ்வில் சிறந்த நிலையடைய வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப். முந்தைய பதிவு                                                                                    அடுத்த பதிவு பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலைக்கு காரணம் - விளக்கம்

உண்மைதான், பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலை வருவதற்கு காரணம். பூவிற்குக்கூட நெருடல் தராத பட்டாம்பூச்சிக்கா இந்த பழி? ஆம், இறக்கை அலையில் காற்றில் மெல்லியன சலனம் ஏற்படுத்தும் பட்டாம்பூச்சியானது மற்றோரு சிறிய செயலை பாதிக்கும். அந்த பாதிப்பானது மற்றோன்றை பாதிக்கும். இவ்வாறு ஒன்றொன்றாய் சேர உருவெடுக்குமாம் ஆழிப்பேரலை. இதையே லொரெண்ட்ஸ் தத்துவம் விளக்குகிறது. நாம் செய்யும் அல்லது மாற்றும் சிறிய செயலானது நம் வாழ்வை முழுவதிலும் மாற்றியமைக்கும் அளவிற்கு வல்லமை பெற்றது. செய்யும் அல்லது மாற்றும் செயலை பொறுத்து அது நல்ல மாற்றமா கொடுங்கூர் மாற்றமா என்பது அமையும். "மாறுவோம் மாற்றுவோம், புதிய உலகம் உருவாக!" முந்தைய பதிவு                                                                                    அடுத்த பதிவு பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

உடைப்பவரா? உருவாக்குக்குபவரா?

மதிக்கருக்கும் மதியவேளையில் சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள் அஹமதாபாத் அருகே, கல்லுடைக்கும் குழுவிடம் கேட்டார் ஒரு பெண்மணி... "என்ன செய்கிறீர்கள்?" என்று... பதிலோ வேலையாளிடமிருந்து, "கல்லுடைக்கிறேன்..!" சற்று தள்ளி சென்று மற்றோருவருடன் விசாரிக்க.. அவர் சொன்ன பதில் மலைத்துப்போக வைத்தது. "என்ன செய்கிறீர்கள்?", பெண்மணி. "உலகில் மிகப்பெரிய சிலையாய் 600 அடியில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை நிறுவப்படவுள்ளது, அது உருவாவதற்கு வேலைசெய்து கொண்டிருக்கிறேன்." என்றார். கேள்வி ஒன்றுதான், செய்த தொழில் ஒன்றுதான், பதில் வேறுபட்டு நிற்கிறது. சாதிக்கப்பிறந்த சாதனையாளர்களே, உங்களை யாரேனும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றுகேட்டால் "நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்" என்று கூறுங்கள். எண்ணம் மாறினால் எல்லாமும் மாறும். முந்தைய பதிவு                                                                                    அடுத்த பதிவு பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

தனிமை - விளக்கம்

உங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் மனத்தளவிலிருந்து விலகிநிற்கும் பயனில்லா மந்த நிலையே தனிமை. ஊரார் சுற்றியிருப்பினும் உலகில் தனித்துவிட்டதுபோல் உணரப்படும் உணர்வே தனிமை நிலை. உங்களின் எண்ண ஓட்டமும் மனதின் திட்பமும் ஒருநிலைப்படும் வேளையில் தனிமை விலகி சுடரொளி ஏற்றி வெளிச்சம் பெறுவோம். மனம் ஒருநிலை படும் வேளையில் உற்றார் உறவினர்கள் மனம் ஏதும் நண்பர்களின் நன்மதிப்பு பெற்று நல்லிணக்கம் அடைவோம். தனிமையை உணரும் தருவாயில் தங்களை பற்றி சற்றுஉற்று கவனித்து சீர்திருத்தி தனிமை விலகி இனிமை பெருவீராக! தனிமை எதற்கு என்பதைப் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் . முந்தைய பதிவு பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.