[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

குழப்பம் (அ) என்னமோ மாதிரி இருக்கு


நாம் அன்றாட வாழ்வில் இந்த வார்த்தையை கேளாமல் இருந்திருக்க மாட்டோம். சில சமயங்களில் நமக்கு நாமே சொல்லியிருப்போம். “என்னமோ மாதிரி இருக்கு!”

அந்த என்னமோ மாதிரி இருக்கு என்பதின் நிலைக்கு எவராலும் சரிசெய்து தரமுடியாயது. அது வேறொன்றும் இல்லை மனக்குழப்பம் தான். இந்த நிலையில் மனதால் திரிந்து விலகியது போல் உணர்வோம்.

விளக்கம்:
அன்றாட வாழ்வில் தேக்கிவைக்கும் மன உளைச்சல் சிறுகசேர்ந்து மனம் அமைதிபடும் தருவாயில் ஒரு அசோவ்கரீகத்தை வெளிபடுத்தும். இது நேரக்காரணம் பலநேரங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிபோடுவதின் விளைவே. சில பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காணுதல் காட்டிலும்
, அதை ஆறப்போட்டு சரிசெய்தல் சிறப்பான முடிவாக இருக்கும். அவ்வாறு அது பிறகு களையப்படாமல் விடும் தருவாயில் மனதின் அழுத்தமாய் வெளிப்படுகையில் அந்தக் குழப்பம் ஏற்படுகிறது. பலக்குழப்பங்கள் ஒன்றுசேரவே “என்னமோ மாதிரி இருக்கு” என்ற நிலை மனதிர்க்கு உதிர்க்கிறது மனச்சோர்வு உண்டாகிறது.


வெளிஉலகத்திற்க்கு புரியாது:
இந்த நிலையில் தங்களையே வேறுஒருவர் போல உணர்வீர்கள். ஒரு மந்த நிலை ஏற்படும். சமூகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளமுயல்வோம். மிகவும் நெருங்கியவர்க்கு தொடர்புகொண்டு இதைபத்தி விளக்க முற்படுவோம். இந்த குழப்ப நிலையை வெளிபடுத்தமுடியாத காரணத்தால் அவர்களிடையே உலரத்துடங்குவோம். இந்த நிலை வெளிஉலகத்திற்க்கு புரியாது என்பதை நினைவில் கொள்க.

தீர்வு:
இந்த நிலையில் எடுக்கும் முடிவுகள் சரியானதாய் இருந்ததாக சான்றில்லை. முதலில் அந்தக் குழப்பத்தில் இருந்து வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுங்கள்.

குளப்பதிலிருந்து மீள்தல்:
இந்தக்குழப்பதில் இருந்து மீள்தல் மிகவும் எளிது மற்றும் மிகவும் கடினம். அதற்க்கு முதற்படியாய் யோகா, மூச்சுப்பயிற்சி அல்லது சற்று தூங்கி எழுந்திரியுங்கள். இந்தநேரதில் யோகா, மூச்சுப்பயிற்சி சரிவர இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.  நூல்கண்டில் நூலின் நுனியை சரிவர பிடித்துவிட்டால் நூலை பிரித்தல் சுலபம்.அதுபோலவே இந்தக்குழப்பம் வர தோணியாய் நின்ற பிரச்சனையை சரியே கண்டறிந்து அதற்க்கு தீர்வு கொடுக்க ஒன்றன்பின் ஒன்றாக குழப்பங்கள் குறைவதை உணரலாம்.


இந்தநிலையை தவிர்க்க:
இது அடிக்கடி வராது. மனம் அமைதியிலிருந்து சிறுக சலனப்படும் தருவாயில் இந்த நிலை ஏற்படும். வரும் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வுகாணுங்கள், உடனே தீர்வுகாண முடியாத சந்தர்ப்பத்தில் சிறுககாலம் பொறுத்து தீர்வு காணுங்கள். மனதினில் எறியப்படும் பிரச்சனைகளை தேக்கிவைக்காதீர்கள்.

“கடலலைகளை கவனித்தால் கணம் குறையும்”

மனதில் உள்ள பிரச்சனைகளை தூக்கி எறியுங்கள் றெக்கைகளை விரித்து பறக்கத் துவங்குங்கள் என்ற வேண்டுதலோடு நான் உங்கள் ஆனூர் பிரதீப்.



Share via Whatsapp
முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு

பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Replies
    1. நன்றி தோழா. மேலும் தங்கள் மேம்படுத்துதளுக்கான கருத்துக்களை வரவேற்கிறேன். இணைந்திருங்கள் பக்கத்தோடு.

      Delete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை