"அடுத்தவரின் இலை பார்த்து பசி ஆருதல் சிரமம். "
அண்மையில் இருப்பவர்கள் புத்தாண்டிர்க்கு தீர்மானம் (Resolution) எடுப்பதை கேட்டிருப்பீர்கள். நாமும் எடுப்போம் என எடுக்காமல், நாம் எடுக்கும் தீர்மானத்தின் விளைவு நம் வாழ்க்கையில் என்ன திருப்பத்தை கொண்டுவர உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள்.
சென்ற ஆண்டு நாம் தீர்மானம் எடுத்திருப்போம் அதை முடித்திருந்தால் சிறப்பு, முடிக்க முடியாமல் விடப்படிருந்தால் அதன் காரணம் நோக்குங்கள். மறுபடியும் நேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
எடுக்கும் தீர்மானம் வெற்றிகரமாக முடிய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொள்க. எதற்க்கு முக்கியத்துவம் அதிகம் என்று ஆய்க, பின்பு முன்னுரிமை கொடுத்து சிறப்பான திட்டதோடு செயல்படுத்ததுவங்குங்கள்.
ஒரு சின்ன நல்ல முடிவு நம் வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு வழி வகுக்கும். (விளக்கம்:
பட்டாம்பூச்சியே ஆழிப்பேரலைக்கு காரணம் காண்க! )
எடுக்கும் தீர்மானத்தை இன்றிலிருந்து செய்ய துவங்க ஆரம்பியுங்கள். இன்றை விட சிறந்த நாள் என்றும் இல்லை என்ற எண்ணத்தோடு.
மனதை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.
நல்ல செயல்களை நம் புத்தாண்டில் தான் ஆரம்பிக்க விரும்புவோம்.
புத்தாண்டு - நல்ல துவக்கம் - நல்ல செயல்கள் என்று.
நீங்கள் நினைப்பது போல ஒரே நாளில் அனைத்தும் மறிவிடப் போறதில்லை என்பதே உண்மை. அதை விடாமுயற்சி தன்னம்பிக்கை மூலமாக அடையலாம். சிறுக சிறுக சேரவே மழை நீரும் கடலாகும்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்
எளிதில் ஏற்றிய தீர்மானத்தை சற்று உழைப்பை சேர்த்து உருவாக்குங்கள், நீங்கள் மனதில் கட்டிய கோட்டையை,
நிகழ்வில்.
தேர்ச்சி பெறுதல், நல்ல பழக்கம் பழகுதல், தீய பழக்கம் விடுதல், செல்வம் சேர்த்தல், வீடு கட்டுதல், அலுவலகத்தில் நன்மதிப்பு பெறுதல், ஏழைகளுக்கு உதவுதல், யோகா, மூச்சுப்பயிற்சி, உடல் மெளித்தல் அல்லது உடல் பெறுதல் போன்றவையே நம்மிடத்தில் பெரும்பாலும் தீர்மானமாக இருக்கும்.
நமது அரசு ஆங்கிலப் புத்தாண்டு முதல் நெகிழிப்பைகளை (Polythene Bags/Cover) உபயோகிக்கமாட்டோம் என்று எடுத்த தீர்மானத்தை நாமும் கடைபிடிப்போம்.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள். என்றும் மகிழ்ச்சி பொங்க நோய் நொடி இல்லாமல் வெற்றிகளை சுவைக்க புத்தாண்டு வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
Share this article via WhatsApp
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற
👌 வாழ்த்துக்கள் நல்ல முயற்சி.. நல்ல சிந்தனை
ReplyDeleteநன்றி மதன் குப்தன், நல்வாக்கிற்க்கு. வலைப்பதிவில் இணைந்திருங்கள் மேலும் பதிவிற்க்கு..
DeleteThanks da
ReplyDelete