[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

நீங்கள் யார்? (Who you are?)

"யார் நீ?" என்று பிறர் உங்களை கேட்காமல் இருக்க "நீ யார்?" என்று உங்களிடம் நீங்கள் கேட்கத் துவங்குங்கள்.


"நான் யார்" என்ற உண்மையை உணரத்துவங்குங்கள். சரியோ தவறோ நல்லவரோ தீயவரோ ஏற்றுக்கொள்ளுங்கள். உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுதாலே மாறுதலின் முதற்படி.

பலர் தாங்கள் யார் என உணராமல் பிறர் செய்த செயலின்பால் ஈர்த்து அவரை போலவே தன்னை பாவித்து பிறரின் வாழ்வை வாழத் துவங்குவார்கள். அந்த வாழ்வில், தன் வாழ்கையும் வாழ முடியாமல், தான் நினைத்தது போலவும் வாழ முடியாமல்  ஏங்குவார்.

உங்களுக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம் வழிகாட்டலாம் ஆனால் அதன் வழிநிற்க நாம் தான் முயற்சி செய்தல் வேண்டும்.

"திசைகாட்டி திசை/வழி மட்டுமே காட்டி நிற்கும், அந்த இடத்திற்கு ஒரு போலும் ஈட்டுச்செல்லது"

"புகழுக்கு மயங்கதோர் யாரும் இல்லை!

உங்களை பலரும் பலவாறு புகழ்வார்கள். அங்ஙனம் புகழப்படும்போது அதன் உன்மைத்துவத்தை ஆராய்ந்து அதை ஏறுக்கொள்க. அங்ஙனம் ஆராயாமல் தலைக்கு ஏற்றினால் படும் சிரமம் நமக்கே.

இருள் நீக்கி  இன்பம் பயக்கும் மருள்நீக்கி
மாசறு காட்சி யவர்க்கு
            -திருக்குறள் ௩௫௨(352)

பிறர் நம்மை நீ அதில் சிறப்பு மிக்கவன் இதில் சிறப்பு மிக்கவன் என புகழ் பாடக்கூடும். ஆராயாமல், அதை உங்கள் தனித்துவம் என்று எண்ணல் வேண்டா.
"அடுத்தவர் படகிற்கு நம்மால் துடுப்பு போட முடியாது."

நம்மில் பலருக்கும் பலவாறு இலக்குகள் இருக்கும். அதை நோக்கியே நாம் பயணப்படுவோம். அந்த இலக்கு நாம் குறித்திருக்க வேண்டும், பிறரால் ஊட்டப்பட்டதாக இருக்கக்கூடாது. அடுத்தவர் தாகத்திற்கு நம்மால் தண்ணீர் குடிக்க முடியாது.

உங்கள் வாழ்க்கை எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்க. எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள். உங்கள் எண்ணமே செயல்.
உங்கள் செயலே நீங்கள். யார்க்கும் தீங்கு விளைவிக்காமல் முடிவெடுத்து ஒரு செயல் செய்யபடுமாயின் அதில் தவறில்லை.

ஒரு மனிதன் இடத்து, நல்ல விலங்கும் தீய விலங்கும் உள்ளது. எதற்கு தீனி போடுகிறோம் என்பதிலே நீங்கள் நல்ல குணம் உள்ளவரா இல்லையா என்பது உள்ளது. நல்குண விலங்கிற்கு நல்விருந்தளியுங்கள்  தீகுண விளங்கை தீயிலிடுங்கள்.

உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே வட்டமிட்டு கொள்ளாதீர்கள். எண்ணும் எண்ணம் உயர்வாக இருக்கட்டும். நிலவுக்கு இலக்கு வையுங்கள் தவறி விழுந்தாலும் மேக கூட்டத்தில் விழலாம். அடுத்த முயற்சியில் எட்டிப்பிடிக்கலாம்.


நான் யார்? என்ற கேள்விக்குறி நான் யார்! என்று ஆச்சரிய குறியாக மாற  வாழுத்துகளுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.

Share to friends via WhatsApp 



முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை