Posts

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

மரியாதையை சம்பாதிக்க! (How to earn respect)

Image
ஆனூர் பிரதீப் வலைப்பதிவின் மரியாதைகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல, தாம் ஆற்றும் செயலின் வெளிப்பாடே ஆகும். தமக்கு உலகத்தாரிடம் மதிப்பும் மரியாதையும் தளர்ந்தால் கீழ் கூறியவை தங்களுக்கு உதவும் என நன்புகிறேன். பிறரை மதித்தல்  நேர்மை  செயலாற்றும் வல்லமை  நேரம்  பொறுப்பேற்றுக்கொள்ளுதல்  உதவி செய்தல்  பிறரை ஊக்குவித்தல்  முகமலர்ச்சி பிறரை மதித்தல்: “இந்த உலகிற்க்கு என்ன பரிசளிக்கிறோமோ அதுவே இருமடங்காகி தம்மை அடையும்”  தமக்கு மதிப்புகிட்ட வேண்டும் என்ற ஆவல் போல் இவ்வுலகக்தாரிடமும் அவ்வெண்ணம் நிறைந்திருக்கும், தங்களை பிறர் எவ்வாறு மதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே அவர்களை மதியுங்கள். மதிப்பதில், உயர்ந்தோர் தாழ்ந்தோர்; பெரியவர் சிறியவர் என எவ்வித பாகுபாடும் இல்லாதிருப்பது சிறப்பு. “மதிப்பவன் மிதிவதில்லை!”  தனித்துவம்: நம் அனைவரும் தனித்துவம் மிக்கவர்கள், உங்களின் தனித்துவமே உங்களை யார் என்பதை உலகிற்க்கு எடுத்துக்கூறும். தனித்துவத்தை கண்டறிந்து உலகிற்க்கு உங்களை அடையாளப் படுத்துங்கள். உங்களுக்கான தனித்துவத்தை அறிந்து அ

வாழ்க்கைத் திருடன் (Get rid of Smartphone Addiction)

Image
வாழ்வில் அனைத்து நேரங்களில் துணையாய் இருக்கும் நண்பனாகவும், இதயம் அருகில் இருக்கும் வாழ்க்கைத் துணையாகவும், தாம் எண்ணியதை முடிக்க வல்ல அடிமையாகவும் இருக்கும் ஸ்மாட்போன் (Smartphone) பற்றிய பதிவே இது. தாம் நினைத்ததை நித்தம் நின்ற இடத்தில் பெற, தொலைவில் உள்ள உறவுகளிடம் காணொளி உரையாட, உண்ணும் உணவை உறைவிடத்தில் பெற ஆவல் கொண்டதை ஆன்லைனில் பெற என பட்டியலில் அடங்கா பல செயல்களை செய்யவல்ல ஸ்மாட்போன், மனிதர்களுக்கு அடிமை என்பதை மறந்து அது மனிதர்களுக்கு எதிராக திரும்பினால்..? வாழ்க்கை திருடன் - ஸ்மார்ட்போன்: ஸ்மார்ட்போன் மனிதர்களுக்கு உதவும் சாதனமாய் அல்லாமல் அடிமையாக்கி அவர்களையே ஆட்கொள்ள துவங்கியுள்ளது. தமக்கு தேவையானவற்றை கொடுத்து, வசிகரிக்க துவங்கிய சாதனம் இப்போது தேவையில்லாதவற்றையும் உட்புகுத்தி தமது நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை, நேரத்தினால் ஆனவை. அவ்வாறு நேரத்தை திருடுவது அவர்களின் வாழ்க்கையை திருடுவதற்கு சமானமாகும்.  ஏன் மீள வேண்டும்?, எவ்வாறு அடிமை பட்டோம்?, அதன் விளைவு என்ன?, அதிலிருந்து மீள்வது எவ்வாறு? என்பதை பற்றிய இப்பதிவில் காண்போம்.

பிறரிடம் எதிர்பார்க்கக் கூடாத விடயங்கள்! (Things not to be Expected from others)🎖

Image
நமது ஆசை, எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, விடாமுயற்சி, ஏமாற்றம், துன்பம், வெற்றி, தோல்வி, முன்னேற்றம் என பல காரணக்கூறுகளை கொண்டு வாழ்க்கை இயங்குகிறது. இதில் எதிர்பார்ப்பு என்பது அலாதியானது. பிறரிடம் எதிர்ப்பார்க்கும் பல விடயங்கள் சில சமயங்களில் தம்மை ஏமாற்றுவதுண்டு. அதில் சிலவற்றை இப்பதிவில் தீர்வுகளோடு காணலாம். பிறரிடம் எதிர்பார்த்தல்: "தன்னிடம் ஒன்றும் இல்லை" அதனால் தான் பிறரை எதிர்பார்க்கிறேன் என்பதை விட்டுவிடுங்கள். அன்றாட வாழ்வில் தாம் உலகத்தோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இசைந்து வாழவேண்டும் தான். ஆனால், தமது வாழ்க்கை பிறரது வாழ்க்கையாகிவிடக்கூடாது. கீழ்காணும் சிலவற்றை பிறரிடம் இருந்து எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள்வதே சிறப்பு. 1. மதிப்பு: தம்மை இவர்கள் இவ்வாறு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. மாறாக, நல்மதிப்பை பெரும் வகையில் நடப்பது சிறப்பு. தமது செயல்களில் மதிப்பே தங்களின் மதிப்பு. உலகம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே உலகத்திற்கு மதிப்பு கொடுங்கள். 2. பாராட்டு / வாழ்த்து: தம்மை சுற்றியிருப்பவர்கள் தம்மை எப்போதும் புகழ் பாடவே

சந்திரயான் 2 - விண்கலம் - விளக்கம்

Image
தன்னம்பிக்கை சார்ந்த பதிவுகளை மட்டும் தாங்கி வந்த நம் வலைப்பதிவு அறிவியல் பற்றி எடுத்துரைக்க காரணம், உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது நம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனமான Indian Space Research Organisation (ISRO). இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் திட்டமும் செயலாக்கமும் உலகம் வியக்கும் வகையில், ஒரு படி மேலேயே இருக்கும். சந்திரயான் 2 என்பது யாது? சந்திரயான் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) வின் நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்க்கான செயற்கைகோள். சந்திரயான் 1 இன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியின் செயற்கைக்கோளின் பெயரே சந்திரயான் 2. ஆராய்ச்சி எதற்கு? பலரின் கேள்வி இதுதான் வறுமை, விவசாய பிரச்சனை, பசி பட்டினி என பல பிரச்சனைகள் இருக்க ஆராய்ச்சி நடத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பது தேவைதானா என்பது! எரிக்கற்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, எதிர்கால தேவையான தண்ணீரின்  தேடல் , மக்கள் வாழ ஏதுவான இடம் கண்டறிதல், இயற்கை சீரழிவில் இருந்து காத்துக்கொள்ள, DTH மற்றும் கைபேசிக்கான சமிக்ஞை (Signal), நம்மை சுற்றி இருக்கும் விந்தைகளை

கேள்வி இன்பம் (Pleasure in asking Questions) 🎖

Image
தொழில்நுட்ப வளர்ச்சியும் காலகட்டம் மாற்றமும் மனிதனை அறிவுக்கூரின் அடுத்தக்கட்டம் நகர்த்திச்செல்கிறது. இதற்கு காரணம் வற்றா அறிவும், தீரா வித்யாதாகமும் (Knowledge Thirst).  வித்யாதகத்திற்கு மூலக்கூறு அறிவார்ந்த கேள்விகளும், அதை அறிய நினைக்கும் விடாமுயற்சி மனநலமுமே. கற்றறியாததை அறிந்துகொள்ள முயலும் வழியே கேள்வி. கேள்வி என்பதை கேள்வி இன்பம் எனக்கூறுவதன் காரணம், அறிவு. கேள்வியின் விளைவில் அறிவு பிறந்து வாழ்விற்கு இன்பம்பயக்கும் என்பதினால். கேள்வி என்பது அறிவுப்பேழை. எடுக்கும் முயற்சியே திறவுகோல். செல்வமே அறிவு. அன்றாட வாழ்வில் பல கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே வாழ்கிறோம். ஒருவரின் அறிவு வளர்ச்சியானது அவரவர்களின் கேள்விகளை பொருத்தும் அதை அறிய நினைக்கும் விவேகம் பொருத்தும் அமையும். "அறிந்தது கையளவு; அறியாதது உலகளவு" அனைத்தும் அனைவராலும் அறிந்திருத்தல் அரிது. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப தனித்துவ பிரிவில் அறிஞராய் இருக்கக்கூடும். கேள்வி வினவப்படுவதன் மூலம், தமக்கும் ஒன்றும் தெரியாது என்பது அர்த்தமன்று. அறிந்தவரை காட்டிலும் தமக்கு புலப்படாத விடயங்களில், அறியா

குறை கூறாதீர்கள் (Stop Complaining) 🎖

Image
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு குறையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், பலரும் அதை வெளிக்கொணர விரும்புவதில்லை. நம் குறை வெளிய தெரியாவண்ணம் பிறரை, "அவர் சரியில்லை, இவர் சரியில்லை, எவருமே சரியில்லை" எனக்கூறி அந்த பிம்பம் பின் ஒழிகிறோம். "நானெல்லாம் ஒருகாலத்துல,..., நீயும்தான் இருக்கிறியே!" "எங்கையோ போன எருமைமாடு எம்மேல வந்து ஏறுச்சாம்" "இப்படியே பண்ணிட்டு இருந்தா நீ எங்க உருப்பட போற" இவ்வாறு மற்றும் பலவாறு வசப்பாடுதலை கேட்டிருப்போம். சிலர் அன்றாட வாழ்வில் பிறரை குற்றம் சாடியே அவர்களின் வாழ்வையும் பிறரின் முன்னேற்றத்தையும் அழித்துவருகின்றனர். பிறரை குற்றம் சாடுவதில் என்ன தீங்கு என்பதின் விளக்கமே இந்தப்பதிவு. ஒருவர் தான் பிறரைவிட மேலானவர் என்பதை பிறர்க்குவெளிப்படுத்தவும் தன்குறை மறைக்கவும், குற்றம் சாடி, இழிவுபடுத்தி, அவமதித்து, குறை கூறுவது வாடிக்கையாக்கிக்கொள்வர். காலையில் எழுவதில் இருந்து இரவில் துயிலுறாங்க செல்லும் வரை பிறரை பாராட்டுதலைக்காட்டிலும் வசைபாடுவதே அதிகமாக கொள்வர் மனதளவில் குன்றிய சிலர்.  குறைகூறுவதின் மூலம் அன்பு, கருணை, இ

சிறப்பான தோல்வி (Perfect Failure)

Image
தோல்வியில் என்ன சிறப்பான தோல்வி, மோசமான தோல்வி என்ற வினாவுடன் வருகை தந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம். எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விழுந்து தோற்றவர்க்கும், அலாதியாய் முயற்சி செய்து ஏதேனும் காரணம்கொண்டு தோல்வியை முத்தமிட்டவர்க்கும் வேறுபாடு உள்ளது தானே? தோல்வியடைந்தவுடன் மனச்சோர்வு உண்டாக நேரிடும், உழைப்பு வீணானதை நினைத்து உருக நேரிடும், கண்ட கனவு சிதைந்ததை நினைத்து வருத்தப்படக்கூடும். எண்ணியது எண்ணியவாறு நிகழா தருணம் எண்ணத்தில் ஏதோ சலனம் ஏற்படுத்தும்,  தங்களை தாங்கள் இழந்தது போல உணரச்செய்யும். திருக்குறள் ௬௧௧ ( 611):   அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். தோல்வி உங்களை வாட்டி எடுக்கும். சிந்தித்துப்பார்க்கையில், முயற்சி செய்யாமல் தோற்றவரைக் காட்டிலும் முயற்சி செய்து தோற்றவர் ஒருபடி மேல். ஒரு செயலுக்காக அயராது உழைத்து, காலத்தை செலவு செய்து, பல விருப்பங்களை களைந்து, நேரத்தை பெருக்கி, கவனத்தை செலுத்தி, மலையாளவு முயற்சி செய்து இறுதியில் தோல்வியுற்றால், அதிலும் ஏதேனும் கற்றுக்கொண்டு முன்னேற முனைந்தால், அது தோல்வியிலும் சிறந்த தோல்வி தானே? இறந
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.