[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

சந்திரயான் 2 - விண்கலம் - விளக்கம்

தன்னம்பிக்கை சார்ந்த பதிவுகளை மட்டும் தாங்கி வந்த நம் வலைப்பதிவு அறிவியல் பற்றி எடுத்துரைக்க காரணம், உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது நம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனமான Indian Space Research Organisation (ISRO).

இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் திட்டமும் செயலாக்கமும் உலகம் வியக்கும் வகையில், ஒரு படி மேலேயே இருக்கும்.



சந்திரயான் 2 என்பது யாது?
சந்திரயான் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO) வின் நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்க்கான செயற்கைகோள். சந்திரயான் 1 இன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியின் செயற்கைக்கோளின் பெயரே சந்திரயான் 2.

ஆராய்ச்சி எதற்கு?
பலரின் கேள்வி இதுதான் வறுமை, விவசாய பிரச்சனை, பசி பட்டினி என பல பிரச்சனைகள் இருக்க ஆராய்ச்சி நடத்த கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பது தேவைதானா என்பது!

எரிக்கற்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, எதிர்கால தேவையான தண்ணீரின்  தேடல் , மக்கள் வாழ ஏதுவான இடம் கண்டறிதல், இயற்கை சீரழிவில் இருந்து காத்துக்கொள்ள, DTH மற்றும் கைபேசிக்கான சமிக்ஞை (Signal), நம்மை சுற்றி இருக்கும் விந்தைகளை அறிய என பல காரணம் கொண்டு அத்தியாவசிய தேவை முதல் ஆடம்பர தேவைவரை அடைய வழிவகுக்கிறது. இது நாம் மட்டும் அல்லாது உலக நாடுகளின் போட்டியில் நிகழ்ந்து வருகிறது. 

சந்திரயான் பயணம்:
சந்திரயான் பயணமானது, 50 ஆண்டுகள் முன் நாசா நிகழ்த்திய "நிலவில் மனிதன்" என்ற இலக்கின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை அறிய ஏவப்பட்டது, அதன்வாழ்நாள் காலம் 2 ஆண்டுகள். சந்திரயான் 1 வெற்றிக்கு பிறகு, சந்திரயான் 2காண வேலைப்பாடுகள் துவங்கப்பட்டது. சந்திரயான் 1, நிலவின் மேற்பரப்பில் நீர் உள்ளதை அறிந்து அதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தகவல் அனுப்பியது. அதை உறுதிப்படுத்தவே சந்திரயான் 2 விண்கலம் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகள் பிறகு, முழு உருவம் பெற்று ஓங்கி உயர்த்து நிற்கிறது, சந்திரயான் 2. 2018 டிசம்பர் மாதம் ஏவப்படும் என எதிர்பார்த்து தடைபட்டு, ஜனவரி மாதம் 2019 ஒத்திவைக்கப்பட்டு சில காரணம் கொண்டு ஜூலை 15 ஏவத்தயாராக இருந்த நிலையில் சிறு கோளாறு காரணமாக ஜூலை 22 மதியம் 02.43க்கு ஏவத்திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் 2 விண்கலமானது சுற்றுப்பாதை செயற்கைகோள், தரையிறங்கி, உலாவி மற்றும் NASA வின் செயற்கைக்கோள் ஒன்றை ஏந்தி செல்கிறது. பூமியில் இருந்து நிலவை அடைய சுமார் 56 நாட்கள் தேவைப்படும்.



சுற்றுப்பாதை செயற்கைகோள்:
சுற்றுப்பாதை செயற்கோளானது, நிலவின் முப்பரிமாண படங்களை எடுத்து அனுப்பும் . அதன் மூலம் நிலவின் மேற்பரப்பு பற்றி நன்கு ஆராய முடியும்.




தரையிறங்கி:
இதன் வேலையானது உலாவியை பாதுகாப்பாக தரையிறங்க வைப்பதே. தரையிறங்குவதற்கான தரவு தரையிறங்கியிடம் இருந்து பெற்று, அதை உறுதி செய்து ஆராய்ச்சி மைத்தில் இருந்து அனுப்பப்படும். 

உலாவி:
திட்டத்தின் காதாநாயன் இவனே! தரையிறங்கிய பிறகு, அங்குள்ள தட்ப வெட்பம், நீரின் கூறுகள், நிலத்தின் தண்மை, கனிம வளங்களின் நிகழ்வு, என பல காரணக்கூற்றுகளை திறம்பட செய்ய நிரல் மூலம் ஊட்டப்பட்டுள்ளது. இது சூரிய கதிர்களை கொண்டு இயங்கப்படும். இதன் ஆயுட்காலம் 14 நாட்கள்.




சவால்கள்:
1. நிலவின் தென்துருவத்தில் இறங்குதல். அமெரிக்கா, ரஷ்யா போன்ற தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகள் கூட எண்ணிப்பார்க்காத இடம்.
2. சுமார் 975 கோடி செலவில் மட்டுமே செய்து முடிக்கப்பட்ட ஏவுவாகனம்.
3. சுமார் 550 டன்னை சுமந்து செல்லும் திறன்.
4. சுற்றுப்பாதை செயற்கைகோள், தரையிறங்கி, உலாவி மற்றும் ஆராய்ச்சிமையம் இவை அனைத்தும் ஒத்தியங்கு செயல்படுதல் அவசியம்.
5. தரையிறங்கியானது சரியான இடத்தில் தரை இறங்கும் சவால்.
6. குறிப்பிட்ட 14 நாட்களில் உலாவி ஆனது அதன் வேலையை திறம்பட முடிக்கும் சவால். 

சாதனைகள்:
1. நிலவில் தெந்துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமைபெறும்.
2. வளிமண்டலத்தில் நீர் உள்ளதை உறுதி படுத்தும்
3. மனிதர்கள் வாழ ஏதுவான இடமா என்பதை கண்டறிய முடியும் 
4. விண்வெளி நிலையம் தற்போது நிலவை சுற்றியே வருகிறது, அதன் ஆயட்காலம் 20 ஆண்டுகள். நிரந்தர விண்வெளி நிலையம் நிலவில் அமைக்க ஒரு முயற்சி
5. கனிம வளங்களை கண்டறிந்து அதை உபயோகிக்க
 மற்றும் பல திட்டங்கள் கைகூடக்கூடும்.

அடுத்த இலக்கு:
சந்திரயான் 2இன் வெற்றிக்கு பிறகு, மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படவுள்ளது அதற்கு பெயர் ககன்யான் (சந்திரயான் 3) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 (22 ஜூலை 2019, 02:43 PM) ஏவப்பட்டதை காணொளியாக காண இங்கே சொடுக்கவும்.


தேதி
நிகழ்வு
18/10/2008
நிலவில் தரையிறங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது
22/07/2019 (02:43 PM)
சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது
24/07/2019 (02:52 PM)
பூமிக்குட்பட்ட முதல் சுழற்சி பாதை மாற்றத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியது
07/09/2019
நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு

சந்திரயான் 2 மகத்தான வெற்றியடைய வாழ்த்துக்களுடன், இந்திய குடிமகன் ஆனூர் பிரதீப்.




சந்திராயன் 2 பற்றிய செய்திகளை கைபேசியில் மற்றும் உலாவியில் Notification ஆகப்பெற

Comments

  1. ஆச்சரியப்படுத்தும் நம் அறிவியல் அறிஞர்களின்
    கண்டுபிடிக்கப்பை பற்றி
    எளிதாகவும், தெளிவாகவும்
    அழகாகவும்,சுவாரசியமாகவும் உள்ளது
    இந்தப் பதிவு.
    அருமை...
    உன் அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.......

    ReplyDelete
  2. மனிதனை மூன்றாம் கண்ணில் பார்க்க தூண்டும் ஒரு ஏழாம் அறிவு தான் இந்த அறிவியல் என்பதை உணர்த்துகிறது இந்த பதிவு

    ReplyDelete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை