[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்!

ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். 

அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர்.

அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. 

வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது.

அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். 

சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார்.

மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். 
ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொள்ளவும் வாய்ப்புள்ளது என்று அடுக்கினார் மூதாட்டி.

சித்ரகுப்தர், நீண்ட நாட்களாக ஒரு ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார். ஆயிரம் அந்தனர்களின் இறந்த பாவக்கணக்கை யார்மீது எழுதுவது என்பதே அந்தக்க்குழப்பம். அதற்கு எமதர்மராஜா ஒரு தர்ம வழியை கூறினார். அதுவே ஆகமம்!

இப்போது தாங்கள் கூறுங்கள், இறந்தவரின் பாவக்கணக்கை யார் மீது எழுதலாம்?

பாம்பு
பருந்து
அரசர்
சமையல் செய்தவர்
அந்தணர்கள்
மூதாட்டி
அனைவருக்கும் சமமான பாவம்

விளக்கம்:
வலியின் விளைவே விஷத்தை கக்கியது. அது உணவை நஞ்சாக்க  வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. 
உணவை எடுத்துச் சென்ற பருந்திருக்கு தெரியுமா, பாம்பு விஷம் கக்கும். விஷம் உணவில் விழும் என்று! அது பொருத்தமட்டில், தனது உணவை வேட்டையாடியது.
அந்தணர்களுக்கு பசியார வேண்டும் என்ற நல்ல உள்ளத்தில் செய்த செயலாகும். அந்தணர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அந்தணர்க்கு படைக்கும் உணவை சுவைப்பது தவறு. அரசரின் கட்டளையை ஏற்று செய்த சமையலில் விஷம் கலந்தது அவருக்கும் தெரியாது..
பசியாற வந்தவர்கள், பரலோகம் சென்றனர் என்ன நடந்தது என்பது கூட அறியாமல்.
நடந்தது சரிவர அறியாமல் பிறர்மீது குற்றம்/ பழி கூறியதால்.
மூதாட்டி மீதே அந்த பாவம் வந்து சேரும். நடந்ததை அறியாமல் ஆராயாமல் ஒருவர் மீது குற்றம் / வீண்பழி உரைப்பது  பாவமாகும். 

தெரிந்து தெளிந்த விடையங்களை மட்டுமே உரைப்போம்; பிறர் மனம் புண்பாடாதவாறு திகழ்வோம். தினமும் ஒருவரின் முகமலர்ச்சிக்கு காரணமாய் இருப்போம்! தங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி இங்ஙணம் ஆனூர்  பிரதீப். 

கதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களின் நீதி எவ்வாறு உள்ளது எனக்காண்போம்! பதிவை பகிர...



Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖