[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

மரியாதையை சம்பாதிக்க! (How to earn respect)

ஆனூர் பிரதீப் வலைப்பதிவின் மரியாதைகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல, தாம் ஆற்றும் செயலின் வெளிப்பாடே ஆகும். தமக்கு உலகத்தாரிடம் மதிப்பும் மரியாதையும் தளர்ந்தால் கீழ் கூறியவை தங்களுக்கு உதவும் என நன்புகிறேன்.
  • பிறரை மதித்தல்
  •  நேர்மை
  •  செயலாற்றும் வல்லமை
  •  நேரம்
  •  பொறுப்பேற்றுக்கொள்ளுதல்
  •  உதவி செய்தல்
  •  பிறரை ஊக்குவித்தல்
  •  முகமலர்ச்சி

பிறரை மதித்தல்:

“இந்த உலகிற்க்கு என்ன பரிசளிக்கிறோமோ அதுவே இருமடங்காகி தம்மை அடையும்” 
How to show Respect


தமக்கு மதிப்புகிட்ட வேண்டும் என்ற ஆவல் போல் இவ்வுலகக்தாரிடமும் அவ்வெண்ணம் நிறைந்திருக்கும், தங்களை பிறர் எவ்வாறு மதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே அவர்களை மதியுங்கள். மதிப்பதில், உயர்ந்தோர் தாழ்ந்தோர்; பெரியவர் சிறியவர் என எவ்வித பாகுபாடும் இல்லாதிருப்பது சிறப்பு.

“மதிப்பவன் மிதிவதில்லை!” 

தனித்துவம்:

நம் அனைவரும் தனித்துவம் மிக்கவர்கள், உங்களின் தனித்துவமே உங்களை யார் என்பதை உலகிற்க்கு எடுத்துக்கூறும். தனித்துவத்தை கண்டறிந்து உலகிற்க்கு உங்களை அடையாளப் படுத்துங்கள். உங்களுக்கான தனித்துவத்தை அறிந்து அதில் ஆசானாக இருக்க முயல்தல் வேண்டும், தனித்துவம் மிக்கவரின் புகழ் என்றும் ஓங்கும். 
Very Unique' and Absolute Adjectives | Merriam-Webster

நேர்மை:

ஒழுக்க நெறிகளை வகுத்து, யாரும் இல்லாத போதும் / நம்மை யாரும் கவனிக்காத போதும் ஒழுக்க நெறிகளை சரியே கடைபிடிப்பதின் மூலம் தம்மை நீதிவழி தவறாத நேர்மை உள்ளம் கொண்ட உள்ளம் என்று உலகம் மதிக்கும். நம்பிக்கை,நேர்மை தவராதவரிடத்து தலைத்தோங்கும்.

“சொல்லும் செயலும் அம்பு போல் கூர்மையானதாகவும் வலுவுடையதாகவும் ஒன்றை மட்டும் சுட்டுதல் வேண்டும்” 

செயலாற்றும் வல்லமை:

“பேச்சை குறைத்து செயலில் அறுவடை செய்வதே அமுதளிக்கும் செயலாகும்”

கற்பனை திறன் கொண்டு கனவு காண்பது எளிது அதனை செயல் கொண்டு செய்து முடிப்பது அறிது. சொல்லி செய்யும் செயலுக்கு மதிப்புண்டு, சொல்லலாமல் செய்யும் செயலுக்கு சிறப்புண்டு. உரைத்த செயலை முடிக்க வல்லவர் என்றும் மதிக்கத்தக்கவர்.

பேச்சில் தளைத்தோங்கி செயலில் பதறாய் இருந்தென்ன பயன்!

Monday Motivation – Don't Just Think Act! | First Time Triathlete

நேரம்:

இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம் என உணர்த்தும் விடையம், நேரம். நேரத்தை சிக்கனமாய் சிறப்பாய் பயன்படுத்துவர்க்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் ஈட்டுவதோடு பலரின் கவனத்தையும் உங்களை சிறப்பாக தனித்துவமாக கையாள்வதோடு மரியாதையும் கிட்டும். நேரம் பற்றிய சிறப்புகளை மற்றொரு பதிவில் காணலாம். 

Time to pursue a hobby, learn new skills: Top firms advise ...

பொறுப்பேற்றுக்கொள்ளுதல்:


ஆற்றும் செயலில் முதன்மையேற்று பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், ஆளுமைத்திறன் அதிகாரிக்கும். ஆளுமைக்கு என்றும் உலகம் அடிபணியும். ஆளுமையின் தரம் கொண்டு மதிப்பு நிர்ணையக்கப்படும். பொறுப்பேற்றல், உங்களை மற்றும் உங்களை சார்ந்தவரை/சார்ந்தவற்றை நெறி படுத்தும் உன்னத செயலுக்கு மதிப்பு கிட்டும். 

What Superheroes Teach Us About Responsibility | Live Happy Magazine

உதவி செய்தல்:


பிறர்க்கு உதவுதல் மானிட பண்பின் உயர்ந்த குணமாகும். பிறரின் வாழ்வில் அக்கறை கொண்ட சுயநலமற்ற செயல் தேவர்களுக்கு ஒப்பாகும். யார் எவர் எனக்கருதாமல் உதவி நாடுவோர்க்கு உதவி துயர் துடைக்கும் ஈகை பண்பானது, தங்களை என்றும் மறவாது அவர்களின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைக்கும். 

Helping Others Dampens the Effects of Everyday Stress ...

பிறரை ஊக்குவித்தல்:

இருள் சூழ்ந்த மனதில், கதிரொளி போல் ஊக்குவித்து வாழ்வில் ஒளி சேர்த்து தன்னலம் கருதாது பிறர்க்கு ஊக்குவிக்கும் பண்பானவர்கள் கதிரவனுக்கு ஒப்பானவர்கள். பிறரை ஊக்குவித்தல் மூலம் அவர்களின் வாழ்வை உயரச்செய்து அவர்களின் அன்பு மற்றும் நற்பெயருடன் மரியாதையும் பெறுவார்கள்.

Motivating Others: A Key to Success at Home, at Work or at School ...

முகமலர்ச்சி:


தம்மை ஆயிரம் கவலைகள் பற்றியிருந்தாலும், உலகிற்க்கு முகமலர்ச்சியுடன் அணுகாதல் மூலம் இனிமையான சூழலை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு பிடித்தமானவராகிறோம். தமது முகமலர்ச்சி, பிறரின் மனதை வசீகரிக்க வல்லது, மனம் பரவச்செய்யவல்லது.

Yellow Emoji Birthday Party Happy Face Symbol Classic Round ...

இப்பதிவை படித்தமைக்கு நன்றி! தங்களின் மதிப்பிற்குரிவருக்கும் பகிர்ந்து, தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி!




பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Nalla pathivu nanba...
    Valthukal nanba melum thodaraa...
    Seyalatrum vallamai thalaipu ennai pathithathu...

    ReplyDelete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை