[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

வாழ்க்கைத் திருடன் (Get rid of Smartphone Addiction)

வாழ்வில் அனைத்து நேரங்களில் துணையாய் இருக்கும் நண்பனாகவும், இதயம் அருகில் இருக்கும் வாழ்க்கைத் துணையாகவும், தாம் எண்ணியதை முடிக்க வல்ல அடிமையாகவும் இருக்கும் ஸ்மாட்போன் (Smartphone) பற்றிய பதிவே இது.

தாம் நினைத்ததை நித்தம் நின்ற இடத்தில் பெற, தொலைவில் உள்ள உறவுகளிடம் காணொளி உரையாட, உண்ணும் உணவை உறைவிடத்தில் பெற ஆவல் கொண்டதை ஆன்லைனில் பெற என பட்டியலில் அடங்கா பல செயல்களை செய்யவல்ல ஸ்மாட்போன், மனிதர்களுக்கு அடிமை என்பதை மறந்து அது மனிதர்களுக்கு எதிராக திரும்பினால்..?


வாழ்க்கை திருடன் - ஸ்மார்ட்போன்:
ஸ்மார்ட்போன் மனிதர்களுக்கு உதவும் சாதனமாய் அல்லாமல் அடிமையாக்கி அவர்களையே ஆட்கொள்ள துவங்கியுள்ளது. தமக்கு தேவையானவற்றை கொடுத்து, வசிகரிக்க துவங்கிய சாதனம் இப்போது தேவையில்லாதவற்றையும் உட்புகுத்தி தமது நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது.
மனிதனின் வாழ்க்கை, நேரத்தினால் ஆனவை. அவ்வாறு நேரத்தை திருடுவது அவர்களின் வாழ்க்கையை திருடுவதற்கு சமானமாகும். 
ஏன் மீள வேண்டும்?, எவ்வாறு அடிமை பட்டோம்?, அதன் விளைவு என்ன?, அதிலிருந்து மீள்வது எவ்வாறு? என்பதை பற்றிய இப்பதிவில் காண்போம்.


ஏன் விடுபட வேண்டும்?
பலருக்கும் இந்த கேள்வி எழலாம்.
"கைபேசி இல்லாமல் நான் செய்வதற்கு என்ன வேலை உள்ளது?"
"நான் ஏன் கைபேசி உபயோகத்தை குறைக்க வேண்டும்?"
"பள்ளி/கல்லூரி/அலுவலகம் முடிந்து களைத்த என்னை, கிளர்வூட்டுவது இது தானே?"
"அவ்வாறென்றால் நான் கைபேசி உபயோகிக்கக்கூடாதா?"
கேட்கப்பட்ட அனைத்தும் சரியே!

ஒவ்வொரு மனிதனும் குழந்தையாய் பிறக்கையில் கூக்குரல் மற்றும் அல்லாது ஒரு இலக்குடனும் பிறப்பார்கள். அந்த இலக்கை அடையவே வாழ்வை செலவிடுவார்கள். சிலர் கண்டறிந்து பயணிப்பார்கள், பலர் என்னவென்றறியாமல் வாழ்வை வீண்செலவு செய்வார்கள். வாழ்வின் இலக்கை அறிந்து அதில் பயணப்பட்டு, இலக்கை அடைய கைபேசி அடிமைத்துவத்தில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வளவு மணி நேரம் கைபேசியில் உரையாடினால், இவ்வளவு தரவுகளை (Mobile Network Data) பயன்படுத்தினால் Internet Service Provider (ISP) களுக்கு வருமானம் எனில் நீங்கள் பள்ளி/கல்லூரி/அலுவலகம் முடிந்த பின்னர் உங்கள் நேரத்தை செலவு செய்து அவர்களுக்காக உழைக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

இதன்மூலம் தாங்கள் கைபேசி உபயோகிக்கக்கூடாது என்பது பொருளில்லை, அர்த்தமற்ற செயல்களில் செலவு செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன். தாங்கள் இலக்கை அடைய ஏதுவானவற்றை, கைபேசி வாயிலாக மட்டும் பெறமுடியுமெனில் பயன்படுத்தலாம்.

வாழ்வில் செய்ய ஒன்றும் இல்லை எனில், இலக்கை தேர்ந்திடுங்கள். நேரத்தை செலவிடுங்கள். கைபேசியில் செலவிடும் நேரத்தை நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, விளையாட்டில் கவனம் என பலதரப்பட்டதில் செலவு செய்யலாம்.


எவ்வாறு அடிமை பட்டோம்?
முற்பகுதியில், தொலைவில் உள்ளவர்களிடம் உரையாட இயலும் கருவியாய் தோன்றி தேவையானவற்றை கொடுத்து மெல்ல நுழைந்து, தொடுதிரை, கைரேகை பூட்டு என பல தொழில்நுட்ப வேலைப்பாடுகள் சேர்த்து, உயர் வரையறை புகைப்பட கருவி (HD Camera), கை கடிகாரம், அலாரம், கட்டுப்படுத்தி (Remote Controller)  என பல  கருவிகளுக்கு மாற்றானாய் அமைத்து கையில் ஆறாம் விரலாய் சேர்ந்தது.

அடிமைபட 3 காரணங்கள்:
1. செயலை தூண்டுதல்
2. தொடர்ந்து செய்தல்
3. நன்மை எனக் கருதவைத்தல்

1. செயலை தூண்டுதல்:
செய்யும் செயலில் கவனச்சிதறல் ஏற்படும் வகையில் தேவையற்ற பல அறிவிப்பு செய்திகளை (Notification) புகுத்தி தன் வசம் ஈர்க்கதத்துவங்கியது, ஸ்மார்ட்போன்.

"1 Whatsapp Message"
"You have memories to look back today!"
"You may get new notifications on Facebook"
"Find your match on Tinder"
"Your photo has new likes"
என பல அறிவிப்பு செய்திகள் தங்களை கைப்பேசியை எடுக்க தூண்ட வைக்கும்.
2. தொடர்ந்து செய்தல்:
வாட்சப்பில் (WhatsApp) வந்த செய்தியை பார்க்க சென்ற தாம், முகநூல் பற்றிய ஏதேனும் செய்தி கேட்க, முகநூலை திறக்க முற்படலாம். இவ்வாறு ஒவ்வொன்றாக பின்தொடர 2-3 மணி நேரம் கழிந்த பிறகுதான் செய்துகொண்டிருந்த வேலை நினைவிற்கு வரும். இதையே திரும்ப செய்கையில் வாடிக்கையாகிவிடுகிறது.

3. நன்மை எனக் கருதவைத்தல்:
பல நேரம் வீணாக்கிய பின்னர், பல தொழில்நுட்ப காரணத்தினால் மற்றும் வியப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டதினாலும் ஒருவித போதையில் திளைத்து, நேரம் வீணாக்கப்படவில்லை என கருத்தவைக்கும்.



தாங்கள் செய்த வேலையில் இருந்து திசை திருப்பி நேரத்தை திட்டுக்கொண்டுள்ளதை கவனிப்பீராக.

இதன் விளைவு இன்சோம்னியா (Insomnia - தூக்கமின்மை), நோமோபோபியா (Nomophobia - பகுத்தறிவற்ற பயம்), மனஅழுத்தம் (Mental Stress), பார்வை குறைபாடு, ஞாபகசக்தி குறைவு மற்றும் பல.



கைபேசி போதையில் இருந்து விடுபட சில வழிகள்:
கைபேசி போதையில் இருந்து விடுபட சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். அதோடு சில வழிகளை பின்பற்றுதல் எளிதில் வெளிவர சுலபமாக இருக்கும்.

1. தேவையில்லா செயலிகளை (Apps)  கண்டறிந்து நீக்குதல்:
இதன் மூலம் நேரம் செலவாவதையும் கவனச்சிதறல்களையும் தவிர்ப்பதுடன் கைபேசியின் நினைவகத்தையும் சேமிக்கலாம்.

2. செயலிகளில் உருவுகளை (App icons) நீக்குதல்:
முகப்பில் (Homescreen) உள்ள செயலியின் உருவுகளை நீக்குவதன் மூலம் அதை திறக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுவது குறைக்கப்படும். தேவைப்பட்டால் செயலிகள் பட்டியலில் தேடியெடுத்துக்கொள்ளலாம்.

3. அறிவிப்பு செய்திகளை முடக்குதல்:
தேவையான அறிவுப்பு செய்திகளை மட்டும் இயக்கி தேவையில்லா அறிவிப்புகளை முடுக்குதல். இதன் மூலம் தேவையில்லாத சமயத்தில் கைபேசி உபயோகிப்பதை குறைத்து தாம் செய்யும் செயலில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

4. கைப்பேசிக்கு விடுமுறை கொடுத்தல்:
வாரத்திற்கு ஒருமுறை கைபேசி உபயோகிக்க மாட்டேன் எனக் கருதி அதற்கு விடுமுறை அளித்து உங்களுக்கு பிடித்தமானவர்களிடம்/பிடித்தமானவற்றில்  நேரம் செலவழிக்கலாம்.

5. கைபேசி உபயோகிக்க நேரம் ஒதுக்குதல்:
உண்ணும் போதும், பிறரிடம் உரையாடும் போதும் மற்ற செயல்கள் செய்யும் போது உபயோகிப்பதை விடுத்து அதற்கென சில மணித்துளிகள் நேரம் ஒதுக்குங்கள். துவங்கும் முன் எப்போது நிறுத்த வேண்டும் என்பதை தீர்மானித்து உபயோகிக்க துவங்குங்கள்.



கைபேசியில் சில தீமைகளும் உண்டு பல நன்மைகளும் உண்டு. தீமை துறந்து நன்மை அறிந்து அளவோடு உபயோகித்து நேரத்தை சரியே பயன்படுத்தி வாழ்வில் பல சாதனை புரிய வாழ்த்துக்கள், இங்ஙனம் ஆனூர் பிரதீப்.



பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை