கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
பிறரிடம் எதிர்பார்க்கக் கூடாத விடயங்கள்! (Things not to be Expected from others)🎖
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
நமது ஆசை, எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, விடாமுயற்சி, ஏமாற்றம், துன்பம், வெற்றி, தோல்வி, முன்னேற்றம் என பல காரணக்கூறுகளை கொண்டு வாழ்க்கை இயங்குகிறது. இதில் எதிர்பார்ப்பு என்பது அலாதியானது.
பிறரிடம் எதிர்ப்பார்க்கும் பல விடயங்கள் சில சமயங்களில் தம்மை ஏமாற்றுவதுண்டு. அதில் சிலவற்றை இப்பதிவில் தீர்வுகளோடு காணலாம்.
பிறரிடம் எதிர்பார்த்தல்:
"தன்னிடம் ஒன்றும் இல்லை" அதனால் தான் பிறரை எதிர்பார்க்கிறேன் என்பதை விட்டுவிடுங்கள். அன்றாட வாழ்வில் தாம் உலகத்தோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இசைந்து வாழவேண்டும் தான். ஆனால், தமது வாழ்க்கை பிறரது வாழ்க்கையாகிவிடக்கூடாது. கீழ்காணும் சிலவற்றை பிறரிடம் இருந்து எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள்வதே சிறப்பு.
1. மதிப்பு:
தம்மை இவர்கள் இவ்வாறு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. மாறாக, நல்மதிப்பை பெரும் வகையில் நடப்பது சிறப்பு. தமது செயல்களில் மதிப்பே தங்களின் மதிப்பு. உலகம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவ்வாறே உலகத்திற்கு மதிப்பு கொடுங்கள். 2. பாராட்டு / வாழ்த்து:
தம்மை சுற்றியிருப்பவர்கள் தம்மை எப்போதும் புகழ் பாடவேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க முயலுங்கள். ஏனெனில், தாம் செய்யும் தவறை சுட்டிக்காட்டாத எந்த உறவும் சரியானதாய் ஆகப்பெறாது. என்றும் புகழ்பாடும் வாய், தேவை முடிந்ததும் விட்டு விலகும் என்பதை கவனத்தில் கொள்க.
3. ஊக்கப்படுத்துதல்:
பிறர் நம்மை ஊக்கப்படுத்தினால் மட்டும் தான் செயலை செய்வேன் என்ற எண்ணத்தை விடுதல் வேண்டும். தம்மை ஊக்கப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இருக்கிறது அதை தேடியே அவர்களது பயணம் அமையும், அனைத்து நேரங்களிலும் ஊக்கப்படுத்த ஒருவர் வேண்டும் என்ற எண்ணம் நம்மை மந்தப்படுத்தும்.
4. புரிந்துகொள்ளவேண்டும்:
பிறர் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே பல பிரச்சனைகளுக்கு காரணியாக அமைகிறது. மாறாக நாம் பிறரை புரிந்து கொள்ள முயன்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
5. தீர்வுகள்:
வாழ்க்கை என்பது தீர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகிய மாலை. தமது வாழ்க்கையின் தீர்வுகளை பிறரிடத்து எதிர்பார்த்து நிற்பது, தமது வாழ்க்கை என்பது மருகி அவர்களது வாழ்க்கையாகிறது.
"சரி, இவ்வாறு பிறரிடம் எதிர்பார்க்கக்கூடாத விடயங்களை எங்கிருந்துதான் பெறுவது?" என்ற கேள்வி ஞாயமானது.
பதில்கள் தம்முள்ளே! :
பல புரியாத புதிர்கள், வாழுதலின் காரணம், வெற்றியின் ரகசியம் மற்றும் இன்ன பிற விடயங்களுக்கும் பதில் தம்முள்ளே புதைந்துள்ளது.
1. மதிப்பு:
தமக்கென தம்மை பற்றி பெரும்மதிப்பு வைத்திருத்தல் வேண்டும். அதை பிறரிடம் காட்டாமல் அடக்கமாய் இருப்பது அவசியம். தம்மீது தாம் வைக்கும் மதிப்பு தன்னம்பிக்கை உயர்த்துவதோடு தாம் குடும்பத்திற்காகவும் உலகிற்காகவும் செய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்தும். 2. பாராட்டு/வாழ்த்து:
தாம் செய்த செயல் சிறிதெனினும் அதை உள்ளளவில் பாராட்டுதல் தம்மை எப்போதும் உற்சாகமாகவும் உயிர்ப்பித்திருக்கவும் செய்யும். செயல் சிறிதோ பெரிதோ பாராட்டுங்கள். தம்மை தாமே பாராட்டாவிட்டால் பிறர் எவ்வாறு பாராட்டுவார்!
3. ஊக்கப்படுத்தல்:
ஊக்கப்படுதலுக்கு தாம் சிறப்பாக உள்ளதை எண்ணிக்கொள்ளுதல் வேண்டும். சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை வேண்டும்.
செயல் ஒன்றுதான் அதிலுள்ள வேறுபாடு இன்னும் பல பதிவுகளை படிக்க உற்சாகமூட்டும். 4. புரிந்துகொள்ளுதல்:
பிறரை புரிந்துகொள்வதைக் காட்டிலும், தம்மை தாம் எவ்வாறு புரிந்து வைத்துள்ளோம் என்பதே அவசியம். தம்மை அறிந்து தம் ஆற்றல் என்னவென்று அறிதல் அவசியம். அதுவே வாழ்வை மேலும் சிறப்படைய வைக்கும்.
5. தீர்வுகள்:
தாம் எடுத்த முடிவுகளே தம் வாழ்க்கை. முடிவுகள் சரியோ தவறோ தீர்க்கமாய் எடுத்தல் அவசியம். "பெரியோர்" அறிவுரையின்படி தீர்வுகள் எடுப்பது வாழ்வை இன்னும் செம்மை படுத்த உதவும். பெரியோர் என்பது தம்மீது அன்புகொண்டவர், அறிஞர் மற்றும் மேதைகள்.
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும். அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க. அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்வ...
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...
கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
🤝👏
ReplyDeleteகேள்விகள் ஐந்தும் எல்லோரிடமும் எது என்று தெரியாமலே இருத்து இதுவரை மனதைப் புண்படுத்தி
ReplyDeleteமகிழ்ச்சிக்கு புறம் கொடுத்தது.
விடைகள் ஐந்தும் அமுதம்
இனி இப்பதிவை படித்த எல்லோரின் மனதையும் மேம்படுத்தி
மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்கும்.....
வாழ்த்துகள் உன் எழுத்துக்கள் தொடர....
எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தன்னிலை பூர்த்தி செய்கையில், முன்னிலையிலோ படர்க்கையிலோ அவற்றை எதிர்பார்ப்பது என்பது அற்றுப்போகிறது.. நல்ல பதிவு..
ReplyDelete