[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

கேள்வி இன்பம் (Pleasure in asking Questions) 🎖

தொழில்நுட்ப வளர்ச்சியும் காலகட்டம் மாற்றமும் மனிதனை அறிவுக்கூரின் அடுத்தக்கட்டம் நகர்த்திச்செல்கிறது. இதற்கு காரணம் வற்றா அறிவும், தீரா வித்யாதாகமும் (Knowledge Thirst).  வித்யாதகத்திற்கு மூலக்கூறு அறிவார்ந்த கேள்விகளும், அதை அறிய நினைக்கும் விடாமுயற்சி மனநலமுமே.

கற்றறியாததை அறிந்துகொள்ள முயலும் வழியே கேள்வி. கேள்வி என்பதை கேள்வி இன்பம் எனக்கூறுவதன் காரணம், அறிவு. கேள்வியின் விளைவில் அறிவு பிறந்து வாழ்விற்கு இன்பம்பயக்கும் என்பதினால்.

கேள்வி என்பது அறிவுப்பேழை. எடுக்கும் முயற்சியே திறவுகோல். செல்வமே அறிவு.
அன்றாட வாழ்வில் பல கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே வாழ்கிறோம். ஒருவரின் அறிவு வளர்ச்சியானது அவரவர்களின் கேள்விகளை பொருத்தும் அதை அறிய நினைக்கும் விவேகம் பொருத்தும் அமையும்.

"அறிந்தது கையளவு; அறியாதது உலகளவு"


அனைத்தும் அனைவராலும் அறிந்திருத்தல் அரிது. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப தனித்துவ பிரிவில் அறிஞராய் இருக்கக்கூடும். கேள்வி வினவப்படுவதன் மூலம், தமக்கும் ஒன்றும் தெரியாது என்பது அர்த்தமன்று. அறிந்தவரை காட்டிலும் தமக்கு புலப்படாத விடயங்களில், அறியாததை அறியும் முயற்சியுடையோரே சிறந்தவர்.

திருக்குறள் ௪௧0 (410):
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

அறியாமையில் திளைப்பதை காட்டிலும் அறியமுயலும் செயல் சிறப்பானது. துளிர்விடும் கேள்வியானது தீப்பொறி போன்றது; அறியாமை எனும் காட்டை அழிக்கவல்லது. அறியவேண்டுவதை பிறரிடத்து இரவல் எடுத்தேனும் அறிதல் அவசியம். பிறரிடத்து அறியும் விடயங்களை விட உதித்த கேள்விகளை தானே முன்வந்து அறியும் செயல் மேன்மை பெற்றது.

கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே.

தான் முயற்சியால், ஒரு அறியா விடயத்தை அறிய முயலும்போது பல அறியா விடயங்கள் புலப்பட நேரிடும். அதை பின்தொடர்ந்து செல்ல செல்ல, நிகர மதிப்பு பல விடயங்களை கற்றிருப்பது.


கேள்வி ஆனது தம்மில் தளிர்த்து; அறிவார்ந்த ஆசானாக தம்மை விருச்சம் பெறவைக்க வல்லது.

கேள்வி அறிவாற்றலை பெருக்குமெனில், அர்த்தமற்ற கேள்விகளை தொடுப்பதன் மூலம்  அறிவில் குன்றியவராகவே திகளப்படுவர். கேள்விக்கான விடைதேடும் முன் அதன் முக்கியத்துவம், அடையும் நன்மை, மேன்மை அளிப்பதா என்பதை அறிதல் வேண்டும். இவ்வுலகில் எண்ணற்ற கேள்விகளும் அதன் விடைகளும் பொதிந்து கிடைக்கின்றன. எவை வாழ்விற்கு இன்மை அளிப்பவை என்பதை ஆராய்ந்து அணுகுதல் வேண்டும்.



எந்த ஒரு பூட்டும் திறவுகோல் இல்லாமல் வடிவமைப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் இருந்தே தீரும். கேள்வியின் உருவம் பொருத்தும் தேடலின் விவேகத்தைப் பொருத்தும் தேடுதலின் ஆழத்தைப் பொருத்தும் விடை கண்டறிதல்.

கேள்வி, அறிவுப் பேழையும்; ஒரு துர்தேவதையும் கூட.

சிலநேரங்களில் சில கேள்விகளுக்கு பதில் அறியாமலும் பதில் உரைக்காமலும்  இருத்தலே சிறப்பு. சில கேள்விகள் பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஈட்டுச்செல்லும் வலிமை பெற்றவை.




கேள்விகளை துளிர்விடச் செய்து தேடுதல் கொண்டு விரட்டி அறிவாற்றலில் மேன்மை பெற வாழ்த்துக்களுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.




பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

  1. Ahaa, its pleasant discussion about this paragraph at this place at this webpage,
    I have read all that, so now me also commenting at this place.
    I could not refrain from commenting. Exceptionally well written! I’ve been surfing online
    more than 2 hours today, yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. In my view,
    if all website owners and bloggers made good content as you
    did, the internet will be much more useful than ever before.
    http://cspan.co.uk

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல. நண்பர்களுக்கும் பகிருமாறு வேண்டுகிறேன்.
      பக்கத்தில் இணைந்தமைக்கும் நன்றி

      Delete
  2. Everyone loves what you guys are usually up too. This sort of clever work and reporting!
    Keep up the great works guys I've added you
    guys to my personal blogroll. I couldn’t resist commenting.
    Well written! It is appropriate time to make some plans for the future and it is time to be happy.
    I’ve read this post and if I could I desire to suggest you
    some interesting things or advice. Perhaps you could write next articles
    referring to this article. I want to read more things
    about it! http://cspan.org

    ReplyDelete
    Replies
    1. தங்களது மேலான கருத்திற்கு நன்றி சகோதரா.

      Delete
  3. Way cool! Some very valid points! I appreciate you writing this post and the rest of the website is very good.
    What's up, I log on to your blog like every week.

    Your writing style is awesome, keep up the good work!
    Wow, this post is fastidious, my younger sister is analyzing these things, therefore I am going to let know her.
    http://goodreads.com

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்து மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது பெயர் அல்லது Google கணக்கு கொண்டு கருத்து தெரிவித்தால் மேலும் நன்று.

      Delete
  4. I every time spent my half an hour to read this web site's content all the time
    along with a mug of coffee.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தே ஒரு அழகிய நடையை மருகியுள்ளது.

      Delete
  5. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. Hòa tan cùng với nước ấm áp thành láo lếu hợp
    sữa tươi béo ngậy.

    ReplyDelete

Post a Comment

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை