கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
குறை கூறாதீர்கள் (Stop Complaining) 🎖
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு குறையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், பலரும் அதை வெளிக்கொணர விரும்புவதில்லை. நம் குறை வெளிய தெரியாவண்ணம் பிறரை, "அவர் சரியில்லை, இவர் சரியில்லை, எவருமே சரியில்லை" எனக்கூறி அந்த பிம்பம் பின் ஒழிகிறோம்.
"நானெல்லாம் ஒருகாலத்துல,..., நீயும்தான் இருக்கிறியே!" "எங்கையோ போன எருமைமாடு எம்மேல வந்து ஏறுச்சாம்" "இப்படியே பண்ணிட்டு இருந்தா நீ எங்க உருப்பட போற"
இவ்வாறு மற்றும் பலவாறு வசப்பாடுதலை கேட்டிருப்போம்.
சிலர் அன்றாட வாழ்வில் பிறரை குற்றம் சாடியே அவர்களின் வாழ்வையும் பிறரின் முன்னேற்றத்தையும் அழித்துவருகின்றனர். பிறரை குற்றம் சாடுவதில் என்ன தீங்கு என்பதின் விளக்கமே இந்தப்பதிவு.
ஒருவர் தான் பிறரைவிட மேலானவர் என்பதை பிறர்க்குவெளிப்படுத்தவும் தன்குறை மறைக்கவும், குற்றம் சாடி, இழிவுபடுத்தி, அவமதித்து, குறை கூறுவது வாடிக்கையாக்கிக்கொள்வர். காலையில் எழுவதில் இருந்து இரவில் துயிலுறாங்க செல்லும் வரை பிறரை பாராட்டுதலைக்காட்டிலும் வசைபாடுவதே அதிகமாக கொள்வர் மனதளவில் குன்றிய சிலர்.
குறைகூறுவதின் மூலம் அன்பு, கருணை, இன்மை நினைத்தல், ஒற்றுமை ஆகிய அனைத்தும் சக்தி இழந்து, கோபம், அழுக்காறு (பொறாமை) , சினம், கடுஞ்சொல் என அனைத்தும் வழு பெற்று தமக்கு கேடு விளைவிக்கும்.
திருக்குறள் ௩௫ (35):
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
குறைமட்டும் கூறி பிறர்க்கு எடுத்துக்கூறாமல், மட்டம் தட்டுபவர் வாழ்வில் ஏதேனும் ஒரு இடத்தில் வளர்ச்சி அடையாமல் நின்றுவிடுவதோடு, தன்னைவிட மேலானோரிடத்து குற்றம் சூடப்படுவது திண்ணம். வினைப்பயன் என்பது வளரிபோல் (Boomarng) சென்று, திரும்ப தம்மிடத்தே வந்து சேரும்.
குறைகூறிக்கொண்டிருக்கையில் ஒருவரின் மனநிலையானது எதிர்மறை எண்ணங்களின் புகலிடமாக விளங்கும். குறைகளை கூறுவதை காட்டிலும் நிறைகளை கண்டறிந்து அவைகளை ஊக்குவித்து நேர்மறை எண்ணத்தை தோற்றுவித்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பவரின் உள்ளம் தெய்வத்திற்கு ஒப்பானது. குறைகூறுவதின் மூலம் என்ன மாற்றம் கொண்டுவர இயலும்?
பிறரை குறை கூறுவதை காட்டிலும், செயல் எவ்வாறு நிகழ்தல்வேண்டும் என எடுத்துக்கூறி சீர்வழி செய்தல் சிறப்பு. அதற்கு மாறாக, குற்றத்திற்க்கு மேல் குற்றம் சுமத்தினால் குற்றப்பளு தாங்காமல் அவ்விடமே வீழ்ந்து கிடப்பர், முன்னேற்றம் அடையாமல்.
சிறந்த உறவானது குறைகளை கண்டுகொள்ளாது, நிறைகளையே நித்தம் நினைக்கும். அறியப்பட்ட ஓரிரு குறைகளையும் அக்கணமே எடுத்துக்கூறி சீர்செய்ய முனையும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
குறைகள் கூறுதல் வாழ்வில் எந்த ஒரு சிறப்பும் ஈட்டுத்தராது. குறைகாண வேணுமெனில் தன்னிடத்து உள்ள குறைகளை அறிந்து அதை சீர்செய்ய முனைக.
தாமஸ் புல்லர் உரைப்பதாவது, "பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறோம், வாழும் போது அவதூறு உரைத்து வாழ்கிறோம், நிம்மதியற்று இறக்கிறோம்"
நிறைகளை நமக்கு அருளியது பிறர்க்கு நாம் உதவிசெய்யவே, குறைகளை அளித்தது அனைவரும் சமம் யார்க்கும் யாரும் மிஞ்சியவரில்லை என்பதனை உணர்த்தவே. குறைகளை பெரிது படுத்தாமல் தானும் உயர்ந்து பிறரையும் உயர்த்துமாறு வேண்டி விரும்பும் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும். அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க. அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்வ...
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...
கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
அருமையான பதிவு....
ReplyDeleteநன்றி தோழரே!
Delete"குற்றம் என அறிந்தும்,சற்றும் குறையாமல் குறை மட்டும் கூறும் குன்றிய நெஞ்சத்தார்..
ReplyDeleteகொண்ட குருதியிலும் நஞ்சுடையோர்...
காட்டும் குணத்திலும் நலிவுடையோர்".
குறை கூறுதல் பற்றிய பொருள் சுவை குறையா உந்தன் பதிவு அருமை..
உன் வரிகள் தொடர வாழ்த்துகள் நண்பா..
நன்றி யோகநாத்.
Deleteதங்களது கருத்தும் தமிழ் சொட்ட சொட்ட இனிக்கிறது.
Kurai ondrai nammidathil oruvar kandaal dhan naam ethagaya nilayil irukirom enbadhai unara mudium..
ReplyDeleteSilaruku , pirar koorum kuraigalalil ulla karuthai mattum kandu vitu, thevayatra silavatrai indha kaadhil vaangi andha kaadhil vidum gunam undu...
Anhda kootathil nanum oruvan..
Silar pirar koorum kuraigalal manam nondhu adhai enni enni varundhuvar..
Athagayoruku unnudaya ikkaturai samarpanam...
VAAZHGA VALAMUDAN
நன்றி Ben! பக்கத்தில் இணைந்தமைக்கு நன்றி!
Delete