[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்சு கலந்து உங்களை கொ

சிறப்பான தோல்வி (Perfect Failure)

தோல்வியில் என்ன சிறப்பான தோல்வி, மோசமான தோல்வி என்ற வினாவுடன் வருகை தந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம். எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விழுந்து தோற்றவர்க்கும், அலாதியாய் முயற்சி செய்து ஏதேனும் காரணம்கொண்டு தோல்வியை முத்தமிட்டவர்க்கும் வேறுபாடு உள்ளது தானே?

தோல்வியடைந்தவுடன் மனச்சோர்வு உண்டாக நேரிடும், உழைப்பு வீணானதை நினைத்து உருக நேரிடும், கண்ட கனவு சிதைந்ததை நினைத்து வருத்தப்படக்கூடும். எண்ணியது எண்ணியவாறு நிகழா தருணம் எண்ணத்தில் ஏதோ சலனம் ஏற்படுத்தும்,  தங்களை தாங்கள் இழந்தது போல உணரச்செய்யும்.

திருக்குறள் ௬௧௧ (611):  
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


தோல்வி உங்களை வாட்டி எடுக்கும். சிந்தித்துப்பார்க்கையில், முயற்சி செய்யாமல் தோற்றவரைக் காட்டிலும் முயற்சி செய்து தோற்றவர் ஒருபடி மேல்.

ஒரு செயலுக்காக அயராது உழைத்து, காலத்தை செலவு செய்து, பல விருப்பங்களை களைந்து, நேரத்தை பெருக்கி, கவனத்தை செலுத்தி, மலையாளவு முயற்சி செய்து இறுதியில் தோல்வியுற்றால், அதிலும் ஏதேனும் கற்றுக்கொண்டு முன்னேற முனைந்தால், அது தோல்வியிலும் சிறந்த தோல்வி தானே?

இறந்த காலத்தை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, நிகழ்தலில் என்ன மற்றம் கொண்டுவர இயலும் என்பதை சிந்திக்க முனைதலே தோல்வியை கையாளும் முறை. இக்கணம் தெளிவுற வேண்டியது வெற்றிக்கும் உங்கள் முயற்சிக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு அதனை குறைப்பதற்கான வழிமுறை என்ன என்பதே!



வாழ்க்கை ஒன்றும் ஒரு புள்ளியில் நின்றுவிடப்போவதில்லை. தோல்வியில் வெற்றியடைவதற்கான காரணம் தேடுபவரே வெற்றிக்கான பாதையையும் வழிவகுக்கிறார். தோல்வி என்னும் பாடம் படிப்பவரே வாழ்க்கை எனும் தேர்வில் சிறப்புறுகிறார்கள்.



தோல்வி நிலையானதில்லை, தங்கள் முயற்சி நிலையிருக்கும் வரை.

இன்று தோற்பவர் நாளை வெற்றியடையலாம். வாழ்க்கை என்பதை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நகர்த்திக்கொண்டே செல்கிறோம், அதில் வெற்றி தோல்வியும் ஒரு மேடு பள்ளம். வெற்றியை மட்டும் சுவைத்துக்கொண்டிருந்தால் அலுப்புத்தட்டி விடும். இடையிடையே வரும் தோல்வி புதிய உத்வேகத்தை கொடுத்து, நம்மை நமக்கு உணர்த்தி, நம்மை மேம்படுத்தி, வெற்றியடைவதற்கான வழி வழிவகுக்கும். சிறப்பான வாழ்வை  வாரிவழங்கும் அனுபவம் தரும் தோல்வி சிறந்த தோல்வி எனக்கூறுவதில் தவறில்லைதானே?



திருக்குறள் ௬௨௦ (620): 
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

புள்ளியை (.) காற்புள்ளியாக்கி (,) தோல்வியில் இருந்து கற்றறிந்த விடையங்களை வெற்றிப்படிக்கட்டுகளாய் மாற்றி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தும் உங்கள் ஆனூர் பிரதீப்.





பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை