கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
தனிமை எதற்கு? (Loneliness for What?) 🎖
சுற்றியிருப்பவரிடத்து சற்றும் சேராமல் எண்ண ஓட்டத்தில் வேறுபட்டு மனதளவில் விலகி தன்னைத் தானே உருக்கிக்கொண்டு தனிமை பிடியில் வாழும் தன்நிகரில்லா உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.
நூற்றில் தொண்ணூறு சதவீதமானோர் தனிமை கசப்பானதென்று அறிந்தும் சுற்றியிருப்பவரின் நல்குதல் இல்லாமையின் விளைவால் தனிமையில் தன்னைத் தானே திணித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அவர்களின் சுற்றியிருப்பவர்களின் கசப்பான நிகழ்வாலும் மனம் ஒன்றா செயலாலும் தனிமையை மனக்குமுறலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
தனிமையில் இருக்கும் நபரின் மனநிலை, உலகில் தனக்கென யாருமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணிப்பார்கள். சில விடையங்களை பெற்றோர் உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ள தயக்கமிருக்கும். நண்பர்களிடத்து சேரா மனம் சில துயரம்வரும்போது, சொல்ல வழியில்லாமல் தன்னைத் தானே சிதைத்துக்கொள்ள முற்படும். அவர்களின் மனநிலை, யாரேனும் சிறிய அக்கறை காட்டிலும் அதை பெரும் கடலெனக் கொள்ளும் மனப்பாண்மை பின்பு அவர்களின் அன்பு பாசத்திற்க்கு ஏங்கி நிற்கும்.
அன்பு,பாசம் மற்றும் பகிர்தல் இல்லா மனம், மனித குணத்தில் இருந்து உளவியலால் மாற்றத்தால் மிருகமாகக் கூடும் (Psycho). தனிமையில் திளைக்கையில், மனிதர்களிடம் ஒன்று சேரா நிலை (Human touch) மனிதகுணத்தில் இருந்து விலகி நம்பிக்கையின்மை, கோபம், செருக்கு, பொறாமை என அனைத்து தீயாகுணமும் ஆட்கொள்ள வாய்ப்புள்ளது.
சிலர் தனிமைப்பிடியில் மாட்டிக்கொண்டு மீள வழியறியாமல் தீயகுணதிற்க்கு வழிசெய்கிறார்கள். பெரும்பாலானோர், தனிமையில் இருப்பதை மறக்க மனதை ஏமாற்றி வாழ்கிறார்கள். அவர்கள் தன்னை வேலைப்பளுவில் புகுத்திக்கொள்வதின் காரணம், வேலை ஏதும் இல்லா சமயத்தில் தான் தனிமையில் உள்ள உண்மையை உணர்ந்துவிடக்கூடாது என்பதனாலே. பெருவாரியாக தனிமைப் பிடியில் மாட்டிக்கொள்பவர்கள் குடும்பத்தை விலகி அன்பிற்க்கு ஏங்கி நிற்கும் இளைஞர்களே.
தனிமையில் இருப்பதின் உண்மையை மனது அறியாதவாறு ஏதேனும் செயலில் ஈடுபடுத்திக்கொள்வது தவறான சிந்தனையில் இருந்து விளக்கிக்கொள்ள வழிவகுக்கும். தோட்டவேலை (Gardening), புத்தகம் படித்தல், வலைப்பதிவு எழுதுதல் (Blog writing), படம் வரைதல், படம் பிடித்தல் (Photography/ Videography) விலங்குகளிடம் நேரம் செலவிடுதல், ஆராய்ச்சியில் செலவிடுதல் என்று பலவழிகள் உள்ளது.
தனிமைக்கு தாங்கள் தங்களை இரையிடுவதின் காரணம், தங்களின் முன்னேற்றப்பாதையில் ஈட்டுச்செல்லும் எனில் தனிமை சிறப்பு. அவ்வாறு இல்லாமல் இருப்பின் தங்களை நித்தம் நோகடிக்கும் தனிமையில் இருந்து விலகிக்கொள்ளுதல் சிறப்பு.
தனிமை எதற்கு?
வேண்டாவெறுப்பாக ஏற்றுக்கொண்ட தனிமையை கொண்டு தன்னை தானே அழித்துக்கொள்கிறோமா? அல்லது எந்த சூழலையும் தனக்கு ஏற்றார்போல் வடிவமைத்துக்கொள்கிறோமா? என்பது தங்களிடமே முடிவுசெய்ய விடுகிறேன். தனிமையில் இருக்கையில் வரும் சிந்தனையானது தங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கவல்லது.
தனிமையில் இருக்கையில் நம் விரல்கோர்த்து நானிருக்கிறேன் என்று மனதார வாக்கிடுகையில் வரும் தன்னம்பிக்கையும் தைரியமும் அலாதியானது. குடும்பம் தவிர்த்து அன்பைக்காட்ட நபர்கள் மனித சந்தையில் மிகக்குறைவு. அவ்வாறு கிடைக்கப்பெரின் தனிமை என்னும் இருளில் அருள் ஒளியாய் வருபவர்களிடத்து உண்மையாய், கோபம்கொள்ளாமல் , பொறாமை இல்லாமல், பொய் கூறாமை இருத்தல் சிறப்பு.
வாழ்வில் வளம் பெற வாழ்த்துகளுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
Share to friends via WhatsApp
<முந்தைய பதிவு அடுத்த பதிவு >
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற
Popular posts from this blog
வாழ்வில் முன்னேற காதுகளை திறந்து வைத்திருந்தாலே போதுமானது ஆகும். ஏனெனில் , நம் குற்றம் நாம் ஆராய்கிறோமோ இல்லையோ அடுத்தவரால் ஆராயப்படும் , பலர்கூட சபையில் அரங்கேறும். அவர்களை கண்டுகொள்ளாது , அவர் கலைந்த குற்றத்தை செவிமடுத்து ஆராய்ந்து தவறெனில் திருதிக்கொள்க. அவ்வாறு தவறில்லாத செயல்கள் செய்திருப்பின் அதை அவர்களிடத்து செய்தது சரி என விளக்காது விலகி நிற்பது சிறப்பு. திருக்குறள் - ௧௮௬ (186): பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். செய்யும் செயலில் சரி தவறு என்பதை ஆய்க . நம் செயலில் பிறர்க்கு துன்பம் இளையாது தமக்கும் தம்மை சார்ந்தோர்க்கும் இன்பம் பயக்கும் எவ்வித செயலும் சரியே. சரி தவறு என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அமையும். நம்மிடத்து ஏதேனும் குற்றம் அறியப்படுமாயின் அதை அக்கணமே சீர் செய்க. படகில் விழும் சிறு துளையானது படகை சாய்க்க வல்லது. நம்மிடத்து ஏற்படும் பிழைகளை கவனிக்க நாள்தோறும் நாட்குறிபேடு எழுதத்துவங்குங்கள் , வார இறுதியில் ஒருமுறை படிக்க சரி எது தவறு எது என நம்மை நமக்கு சுட்டிக்காட்டும். நாட்கள் செல்ல நிகழ்வ...
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...
கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார். அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது. வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள். சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அதில் நஞ்...
அனுபவ வரிகளால் அழகான விளக்கம் கொடுத்தாய் நண்பா..
ReplyDeleteவாழ்த்துகள்..
"அன்பு விளையும் இல்லத்தில் நாம் இல்லை..
பணத்தை ஈட்ட பட்டணம் சென்றோம்..
பாசத்தை விட்டு எட்ட நின்றோம்...
இங்கு,
மனதின் எதிர்பார்ப்போ அன்பும்,ஆறுதலும்
எதிர்பார்ப்பின் விடையாக ஏமாற்றம் எப்போதும்...
தடுமாற்றம் வரும்போது தட்டி கொடுக்க யாருமில்லை..
தவறு ஏதும் செய்யவில்லை,
தண்டனை எனும் தனிமை நிலை..
மனித சந்தையில் மனம் இல்லை..
எனது சிந்தையில் தெளிவு இல்லை..
ஏதோ ஒரு மன குழப்பம்..
எப்போதும் என்னுள் இருக்க...
உடனே இல்லம் செல்ல உள்ளம் தேடி செல்லும்...
கொஞ்சம் செல்வம் சேர்க்கவேண்டி பஞ்சம் தடுக்கும்...
பணத்தின் தேவை பூர்தியாக...
மனதின் தேவை புதிராகியதே"...
மனித சந்தை என்ற ஓர் வார்த்தைக்கொண்டு சிறப்பான ஒரு கவிதை வரைத்திருக்கிறீர்கள் நண்பா. பாராட்டுக்கள்.
DeleteSuper bro... motivation very well... true lines... hates of to you...
ReplyDelete