பலரின் கேள்வி இது தான், மகிழ்ச்சி எங்கே உள்ளது என்று.
உண்மையில் சொல்லப்போனால் மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. நீங்கள் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையில்தான் உள்ளது.
மகிழ்ச்சி மனதின் ஒரு நிலை. தனக்கு உகந்த, பிடித்த நிகழ்வுகள் நடக்கும் தருவாயில் வெளிப்படும் உணர்வே மகிழ்ச்சி. மகிழ்ச்சி வரையறையற்றது, எல்லைகளில்லாதது.
நான் ஏன் மகிழ்ச்சியை இழக்கிறேன்?
நம்மிடம் உள்ள மகிழ்ச்சியை அடுத்தவிரடம் தேடும் தருவாயில் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் நம் நண்பர்களுடன் இணைவதே மகிழ்ச்சியேனில் அவர்கள் இல்லாத தருணம் மகிழ்ச்சியிழந்து துன்பத்தில் தவழ்கிறோம். உங்களின் மகிழ்ச்சியை உங்களிடமே தேடுங்கள் அதை உங்களிடமே உணரத்துவங்குங்கள்.
துன்பம் தளுவும் தருவாயில் நான் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர்க்கு இன்பம் மட்டுமே வாழ்க்கையேனில் வாழ்க்கை வெறுத்துவிடும். அதன் உன்னததுவம் அறியை இலயாது. அதை சீர்செய்ய துன்பமும் அவசியம் என்பதை உணருங்கள்.
"சீனி தின்னுடு காபி குடிச்சா இனிப்பெங்க இருக்கும்?"
என்று வட்டார வழக்கில் கேள்விபட்டிருபோம். காரமும் இனிப்பும் கலந்து உண்கையில் இரண்டின் சுவையும் நன்கு அறியலாம். மகிழ்ச்சியில் இனிமை அறிய இடையிடையே துன்பமும் தேவைப்படுகிறது.
"எனக்கெங்கப்பா மகிழ்ச்சி வருது துன்பம் மட்டும் தான் வருது" என்பதின் மனக்கூவல் அறிகிறேன். துன்பத்தை இன்பமாய் மாற்றும் வல்லமை வளர்ப்பது சிறப்பு. அதை வளர்க்க எங்கும் எதிலும் நன்மையை பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும்.
முளரி மலர் (ரோஜா) முட்களை உடைய அழகிய பூ. அந்த முள், முளரிச்செடியின் நீராதாரம் வெளியே செல்லாமல் காக்கிறது. அழகிய செடியில் முள் இருப்பது அதன் ஆக்கத்திற்கே தவிர அழிவுக்கல்ல. அதே போல் தான் உங்கள் துன்பமும், அவை உங்கள் ஆக்கத்திற்கே தவிர உங்களை அழிப்பதர்கல்ல.
மனதை மகிழ்ச்சியை நோக்கி செல்ல வைப்பது எப்படி?
துன்பத்தில் இருந்து விலகிய நீங்கள் இனி இன்பத்தை நோக்கி செல்ல வேண்டும். நிதர்சனம் என்னவென்றால் துன்பதிற்க்கு செல்ல தான் அதிக உழைப்பு தேவைப்படும். இன்பதிர்க்கு மனதின் ஓசையை மூளையின் வழியே செயல்படுதினால் போதுமானதாகும். இப்பாதையில் வரும் இடையூறு என்னவென்றால், தீயஎண்ணத்தோடு நம்மை யாரேனும் நெருங்குவாறெனினும் அவரிகளை நம்மிடத்து விலக்கி நமக்கு நன்மை நினைப்பாரோடு உறவுகொள்ளுதல் வேண்டும்.
உறவுகளும் மகிழ்ச்சியும்:
சமூகத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கு நன்மை நினைப்பவரிடது நாமும் நன்மை நினைத்து அவரது மகிழ்ச்சியை நம் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்வது உறவுகள் பலபட உதவும். அடுத்தவரிடத்து மகிழ்ச்சிபெருக்க சுயநலமில்லா மனது முக்கியம்.
மகிழ்ச்சியில் உள்ள சிறப்பு “ழ”கரம் வார்த்தையை சிறப்பிற்பது போல, மகிழ்ச்சி உங்கள் வாழ்வை சிறப்பிக்க வாழ்த்துகளுடன் நான் உங்கள் ஆனூர் பிரதீப்.
Share via Whatsapp
பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற
Super na 👌👌👌
ReplyDeleteநன்றி சகோதரா வெற்றி, மேலும் பதிவிற்க்கு இணைந்திருங்கள் பக்கத்தோடு.
Deleteநன்றி, தங்களின் பொன்னான கருத்திற்க்கு. மேலும் பதிவிற்க்கு இணைந்திருங்கள் பக்கத்தோடு.
ReplyDeleteYaaru thozha nee?!!
ReplyDeletePaattaya kilappuringa!!!
நன்றி தோழா! தங்களது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,
Delete