[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

காணொளியும் (Video) கரைதலும்

நாம் வாழ்வில் முன்னேற சாதனை படைக்க தொழிலில் முன்னேற்றம் காண மனதைரியம் பெறுக நம்மை நாமே ஊக்குவிக்க பலரின் பேச்சை கேட்கிறோம் காணொளிகள் காண்கிறோம்.

உண்மையாக உணரவேண்டுவது அவர்களின் பேச்சு அந்த காணொளிகளை நாம் செவிவழி ஏற்றி காற்றில்கரைக்கிறோம் என்பதுதான். காணொளியில் அவர் பேசும் அந்த ரம்மிய குரலும், நல்லஎண்ணத்தின் விளைவும், நாம் கேட்கும் சிறுகாலம் நம்மை அதில் மூழ்கி வெற்றிக்களிப்பில் திளைக்கவைக்கும்.

நம்மை அவர்களின் சிறந்த பேச்சை ஆட்கொள்ளும் போது காதுகள் கேட்கும் ஆனால் மனமும் அறிவும் செவிமடுக்காது. விளைவு காற்றில் கரைதல்.

அந்த வேகம் துடிப்பு அனைத்தும் தொடர்ந்துஇருக்க காதுகளில் இருந்து மனதிற்கு எடுத்துச்சென்று அதை நிலை நிறுத்தவேண்டும். அதை செய்ய காணொளி இயற்றுபவரால் முடியாது. உலகை இயக்கும் உங்களால் மட்டுமே முடியும்.

பலரை பார்க்கிறோம் அறிஞரின் பேச்சை கேட்டு ஒரு செயலை துவங்கி அதை அதற்க்கு மேல் எடுத்துச்செல்ல முடியாமல் என்ன செய்யவேண்டும் என்பதை முழுமையாக சிந்திக்காமல் சொல்வண்ண கிளர்ச்சியில் துவங்கி சிக்கித்தவிக்கும் சின்னங்சிறு சிட்டுக்கள். இதை தவிர்க்க செய்யும் செயலில் தெளிவு பெற்று துவங்குதல் சிறப்பு.


"கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்." 


உணர்தலே உயர்வின் முதல்படிக்கட்டு. காணொளி கேட்க மட்டும் செய்யாமல் உணரத்துவங்கங்கள். அந்த உணர்வு தொடர்ந்து இருக்க, அதை மனதில் நிலைநிறுத்துங்கள். அதை நோக்கி செல்லுங்கள். நினைத்ததை நித்தம் அடையுங்கள். இவ்வண்ணம் ஆனூர் பிரதீப்.
Share via Whatsapp
முந்தைய பதிவு                                                                                   அடுத்த பதிவு

பக்கத்தில் பதியப்படும் செய்திகளை Notification ஆகப்பெற

Comments

வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.

Popular posts from this blog

குற்றங்காணுதல் (Finding Mistakes) 🎖

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை