Posts

Showing posts from February, 2019

[நீதிக்கதை] அந்தணர்கள் நஞ்சுண்ட கதை

கதையை நன்கு படித்துவிட்டு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்! வழங்கிய நீதி சரியா என்பதையும் சரிபார்த்து கொள்வோம்! ஒரு ஊரில் ஒரு அரசர் அந்தணர்கள் யாரும் பசியில் வாடக்கூடாது என எண்ணி தனது அரண்மனை சமையல் செய்பவரை அழைத்து, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு தயார் செய்யுமாறு உத்தரவிட்டார்.  அளவு அதிகம் என்பதால் வெளிப்புறத்தில் உணவு செய்யத் துவங்கினார், சமையல் செய்பவர். அப்போது, விஷம் பாம்பு ஒன்றை பருந்து தனது காலால் அழுத்திப் பிடித்து. கொண்டு, உணவு தயார் செய்யும் வழியாக பறந்தது.  வலி மிகுதியாய் இருந்த காரணத்தால் பாம்பு விஷத்தை உமிழ்ந்து. உமிழ்ந்த விஷமானது உணவில் விழுந்து நஞ்சானது. அந்த உணவு அந்தணர் யாவர்க்கும் பரிமாறப்பட்டது. உணவில் நஞ்சு கலந்த இருப்பதை அறியாத அந்தணர்கள் ஆயிரம் பேர் உயிர் பிரிந்தார்கள்.  சில நாட்கள் உருண்டோடின, பசியில் நலிவுற்று வந்த ஒரு அந்தணர் ஆடு மேய்க்கும் ஒரு மூதாட்டியிடம் குடிக்க நீர், உண்ண உணவு கிட்டுமா என்று வினாவினார். மூதாட்டியோ, என்னிடம் உணவு இல்லை. வேண்டும் என்றால் அங்கிருக்கும் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு உணவளிக்க வாய்ப்புள்ளது என்றார்.  ஆனால் அதில் நஞ்...

தனிமை எதற்கு? (Loneliness for What?) 🎖

Image
சுற்றியிருப்பவரிடத்து சற்றும் சேராமல் எண்ண ஓட்டத்தில் வேறுபட்டு மனதளவில் விலகி தன்னைத் தானே உருக்கிக்கொண்டு தனிமை பிடியில் வாழும் தன்நிகரில்லா உள்ளங்களுக்கு சமர்ப்பணம். நூற்றில் தொண்ணூறு சதவீதமானோர் தனிமை கசப்பானதென்று அறிந்தும் சுற்றியிருப்பவரின் நல்குதல் இல்லாமையின் விளைவால் தனிமையில் தன்னைத் தானே திணித்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அவர்களின் சுற்றியிருப்பவர்களின் கசப்பான நிகழ்வாலும் மனம் ஒன்றா செயலாலும் தனிமையை மனக்குமுறலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தனிமையில் இருக்கும் நபரின் மனநிலை, உலகில் தனக்கென யாருமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணிப்பார்கள். சில விடையங்களை பெற்றோர் உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ள தயக்கமிருக்கும். நண்பர்களிடத்து சேரா மனம் சில துயரம்வரும்போது, சொல்ல வழியில்லாமல் தன்னைத் தானே சிதைத்துக்கொள்ள முற்படும். அவர்களின் மனநிலை, யாரேனும் சிறிய அக்கறை காட்டிலும் அதை பெரும் கடலெனக் கொள்ளும் மனப்பாண்மை பின்பு அவர்களின் அன்பு பாசத்திற்க்கு ஏங்கி நிற்கும்.  அன்பு,பாசம் மற்றும் பகிர்தல் இல்லா மனம், மனித...

நேரம் நிறைவேற்றும் (Time will Fulfil) 🎖

Image
நம் வாழ்வில் எதுவும் எளிதில் உடனே கிட்ட ஆசைப்படுகிறோம். நம் ஆவல்கொண்ட தருணத்திற்கும் நமக்கும் இடைபட்டு நேரம் ஒன்று இல்லாதிருக்க ஆவல்கொள்வோம். அவ்வாறு நிகழ்ந்தால் அதன் அருமை, முக்கியத்துவம், சிறப்பு புரியாமலே போய்விடும். காத்திருத்தலே கிடைக்கப்பெறுதலின் வழி. பிஞ்சிலே பழுக்கும் பழமானது  ஊட்டச்சத்து முழுமை அடையாமல் சுவை ஏதும் சிறக்காமல் பார்ப்பதற்கு கிட்டியதைப்போல் தோன்றினாலும் அதன் உண்மை சுவை மற்றும் பலன் கிட்டாது. அதே போல் தங்களுக்கு வேண்டியதை தக்ககாலம் வரை பொறுத்திருந்து காலம் கனிய கிடைக்குமாயின் அதன் சுவை சிறப்பாக இருக்கும். காத்திருக்கும் காலத்தில் வேண்டுவதின் முக்கியத்துவம், அதன் தேவை, அதன் மீதுள்ள பற்று, மோகம், முக்கியத்துவம், சிறப்பு அனைத்தும் புலப்படும். காத்திருக்கும் வேளையில் அனுபவிக்கும் உணர்வைக்காட்டிலும் கிட்டும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. "தங்களுக்கான பரிசை மூட்டையில் கட்டிக்கொண்டு வர தாமதமாகலாம்" ஆசையின் விளைவால் ஒன்றை பெற முயல்வோம், அது உண்மையில் நமக்கு தேவைதானா என்பதை அறிய காலம் எடுத்துரைக்கும். த...

பிழைகளை அணுகுதல் (Approaching Mistakes)

Image
குற்றங்காணுதலின் (Finding Mistakes) தொடர்பதிவே இது! பிழைகளை கண்டறிந்தபிறகு அதை திருத்திக்கொள்ள முன்னெடுக்கும் தங்களது செயல் பாராட்டிற்கு உரியது. சரியென தவறென இவ்வுலகில் எந்தக்கோட்பாடுகளும் இல்லை, சூழ்நிலைகளைப்பொறுத்தே அவை அமையும். செய்த செயல் யார்க்கும் தீங்குவிளைவிக்காமல் யாரையும் புண்படுத்தாமல் இருப்பின் செய்த செயல் சரியே. பிழையை அணுகும் முறை: இவைமீறியும் ஏதேனும் பிழை இழைத்திருந்தால், இழைத்த பிழைகளை நினைத்து அங்கேயே நின்றுவிடாமல், அதை சீர்செய்ய முனைவது சிறந்த வழி. தாங்கள் செய்த செயலின் நோக்கம் சரியென இருந்தும், யார்க்கும் தீங்கு விளையாத போதும், செய்த செயல் "குற்றம்" என, அறியாதோர் பழியுரைத்தால் கண்டுகொள்ளாது, சினம்கொள்ளாது கடந்து செல்வது உயர்ந்தோர் பண்பு. தாம் செய்த செயலில் பிறர் குற்றம்கண்டால், சினம்கொள்ளாது அதன் உண்மைத்துவத்தை ஆராய்ந்து தவறை அணுகுவதே முறையாகும். திருக்குறள் ௪௨௩ (423): எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. காரணம் கண்டறிதல்: ஒரு பிழை நிகழ்ந்துவிட்டால், நிகழந்ததை நினைத்து வருத்தம்...
வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்! பதிவுகளில் கருத்துத் தெரிவிக்கும் முன் தங்களது பெயர் அல்லது கூகிள் கணக்கை கொண்டு கருத்து பதிவு செய்யவும்.
பதிவில் கருத்து தெரிவித்த பிறகு, "Spam Filtration"க்கு உட்பட்ட பிறகே கருத்து பக்கத்தில் பதியப்படும்.